twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகளவில் அதிக வசூல் செய்த விக்ரம்.. 2022ல் அதிகமாக வசூலித்த தமிழ்ப்படம் என சாதனை!

    |

    சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம்.

    Recommended Video

    Marmayogi , Marudhanayagam Release பற்றி பேசிய கமல் | Vikram Success Meet | *Kollywood

    கமல்ஹாசனின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான விக்ரம் சிறப்பான எதிர்பார்ப்பையும் நல்ல பாராட்டுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    படம் உலகளவில் சிறப்பான வசூல்சாதனை செய்து வருகிறது. தமிழகத்திலும் வசூல்மழை பொழிந்து வருகிறது.

    நயன்தாரா-விக்கி அடுத்தடுத்த பிளான்..திருப்பதி விசிட்.. நாளை செய்தியாளர் சந்திப்பு, ரிசப்ஷன்.. நயன்தாரா-விக்கி அடுத்தடுத்த பிளான்..திருப்பதி விசிட்.. நாளை செய்தியாளர் சந்திப்பு, ரிசப்ஷன்..

    விக்ரம் படம்

    விக்ரம் படம்

    நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி, காயத்ரி என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து விக்ரம் படத்தை எடுத்து அதை ரிலீசும் செய்துவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதிகமான நட்சத்திரங்கள் இருந்த போதிலும் ஒவ்வொருவரையும் சிறப்பாக பயன்படுத்தியதிலேயே லோகேஷின் வெற்றி அடங்கியுள்ளது.

    சிறப்பான பயன்பாடு

    சிறப்பான பயன்பாடு

    காயத்ரி, மைனா நந்தினி உள்ளிட்டவர்கள் தங்களின் காட்சிகள் குறைக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்தாலும், சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அனைவரையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் லோகேஷ். குறிப்பாக குட்டி விக்ரமாக நடித்த தர்ஷனின் நடிப்பும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

    உலகளவில் சிறப்பான வசூல்

    உலகளவில் சிறப்பான வசூல்

    இதனிடையே கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான விக்ரம் படம் சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபீசில் சிறப்பான வசூலை பெற்று வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என திரையிடப்பட்ட வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் படம் ரிலீசான சூழலில் அனைத்து இடங்களிலும் வசூல்மழை பொழிந்து வருகிறது.

    கேரளாவில் முதல் தமிழ்ப்படம்

    கேரளாவில் முதல் தமிழ்ப்படம்

    கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் 25 கோடியை கடந்த ஒரே வாரத்தில் ஈட்டியுள்ளது. கேரளாவில் இத்தகைய வசூலை குவித்துள்ள முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் விக்ரம் படத்திற்கு இதன்மூலம் கிடைத்துள்ளது. இதேபோல சர்வதேச அளவில் இந்த ஆண்டில் அதிக வசூல் படங்களில் முதலிடத்தை விக்ரம் பிடித்துள்ளது.

    உதயநிதி பாராட்டு

    உதயநிதி பாராட்டு

    இதனிடையே தமிழகத்தில் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிசின் உதயநிதி ஸ்டாலினும் படம் சிறப்பான வசூலை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். நம்பமுடியாத வசூல் என்றும் இந்த வார இறுதியில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    100 கோடி கிளப்

    100 கோடி கிளப்

    கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள விக்ரம் படம், தமிழகத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. விரைவில் தமிழகத்தில் பாகுபலி 2 படத்தின் வசூலை விக்ரம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் மட்டும் 9 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துள்ளது.

    English summary
    Kamal haasan's Vikram movie crosses 200 crore in WW Box office collections
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X