ரூ.300 கோடியை நெருங்கும் விக்ரம் படத்தின் வசூல்.. சக்கை போடு போடும் லோகேஷ் -கமல் கூட்டணி!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விக்ரம் படம்.

Recommended Video

Marmayogi , Marudhanayagam Release பற்றி பேசிய கமல் | Vikram Success Meet | *Kollywood

இந்தப் படம் பல வசூல் சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது. வாரயிறுதி நாட்களில் மட்டுமின்றி, வார நாட்களிலும் தொடர்ந்து ரசிகர்கள் படத்தை பார்த்து வருகின்றனர்.

இதனிடையே நேற்றைய தினம் வாரயிறுதி நாளாக இருந்த நிலையில், படத்தின் கலெக்ஷன் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகரித்துள்ளது.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா, மைனா நந்தினி, ஷிவானி, காயத்ரி, மகேஷ்வரி என நட்சத்திர பட்டாளங்களுடன் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான விக்ரம் படம். இந்தப் படம் சிறப்பான பிரமோஷன்களுடன் வெளியானது.

9 நாட்களில் வசூல் சாதனை

9 நாட்களில் வசூல் சாதனை

இந்நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெகுவாக பூர்த்தி செய்து திரையரங்குகளில் தொடர்ந்து ஓடி வருகிறது. கடந்த 9 நாட்களில் வசூல் சாதனை புரிந்துள்ளது விக்ரம் படம். தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் வசூலில் சிறப்பான சாதனைகளை செய்து வருகிறது.

த்ரில் அனுபவம்

த்ரில் அனுபவம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படம் ரசிர்களுக்கு சிறப்பான திரில் அனுபவத்தை கொடுத்துள்ளது. மேலும் சிறப்பான ஆக்ஷன் படமாகவும் வெளியாகியுள்ளது. இதனால் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

லோகேஷின் மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து அவர் விஜய்யின் தளபதி 67 படத்தையும் இயக்கவுள்ளார். இந்நிலையில் முந்தைய படங்களை காட்டிலும் விக்ரம் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

ரூ.300 கோடியை நெருங்கும் விக்ரம்

ரூ.300 கோடியை நெருங்கும் விக்ரம்

இதனிடையே கடந்த 9 நாட்களில் விக்ரம் படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது. தற்போது சர்வதேச அளவில் படத்தின் கலெக்ஷன் 275 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்றும் வாரயிறுதி நாளாக உள்ள நிலையில், படத்தின் கலெக்ஷன் 300 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் சிறப்பான வசூல்

அமெரிக்காவில் சிறப்பான வசூல்

அமெரிக்காவில் மட்டும் கடந்த 9 நாட்களில் இந்தப் படம் 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. லோகேஷின் முதல் படமான மாநகரம் படமும் அமெரிக்காவில் ரிலீசான நிலையில் 22 ஆயிரம் டாலர்களையே வசூலித்தது. இதனிடையே தற்போது அவரது விக்ரம் படம் அதைபோல 100 மடங்கு வசூலை 9 நாட்களிலேயே வசூலித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X