கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. சர்ச்சையை கிளப்பிய கமல்ஹாசன் விக்ரம் பாடல்!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் குரலில் 'பத்தல பத்தல' பாடலில் இடம் பெற்றுள்ள சில வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Recommended Video
இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். அதோடு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் நரேன் காளிதாஸ், ஜெயராம், பிக்பாஸ் ஷிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி, மற்றும் மைனா நந்தினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

விக்ரம்
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு விழா
இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 15-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரிலீசுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

முதல் சிங்கிள்
இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பத்தல பத்தல பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. முன்னதாக கமல் குத்தாட்டம் போடும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு பாடல் குறித்த எதிர்பார்ப்பை எகிறவைத்தது. நேற்று இரவு வெளியான இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கஜானாலே காசில்லே..
அனிருத்தின் இசையில் "பத்தல பத்தல பாடலை" மெர்சலுடன் எழுதி பாடி உள்ளார் கமல்ஹாசன்.
கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே.. என பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். இந்த வரிகள் தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. என்ற வரிகளை சுட்டிக்காட்டி யாரை சொல்கிறார் ஆண்டவர் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











