கமல் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் விக்ரம் படத்தோட டெஸ்ட் சூட் நடந்துருக்கு விரைவில் படப்பிடிப்பு

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் விக்ரம்.

படத்தின் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட தேர்வுகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் 5 வில்லன்கள் மிரட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் டெஸ்ட் சூட்டை லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தில் கவனம்

விக்ரம் படத்தில் கவனம்

அரசியல் களத்தில் மிகவும் பிசியாக இருந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது அரசியல் அலை ஓய்ந்ததையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தவுள்ளார். அவரது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அவர் தற்போது விக்ரம் படத்தின் சூட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் அப்டேட்

இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. ராஜ்கமல் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ் மற்றும் நரேன் என கமலுக்கு 5 வில்லன்கள் டப் கொடுக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

 எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில், பிலோமின் ராஜ் எடிட்டிங்கிலும் அன்பறிவ் சண்டைக்காட்சிகளிலும் கவனம் செலுத்தவுள்ளனர். படத்தின் ஒவ்வொரு கலைஞரையும் லோகேஷ் பார்த்து பார்த்து தேர்வு செய்துவரும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

கமல், விஜய் சேதுபதி பங்கேற்பு

கமல், விஜய் சேதுபதி பங்கேற்பு

இதனிடையே படத்தின் டெஸ்ட் சூட்டையும் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொன்றிலும் அவர் வேகம் எடுத்து வரும் நிலையில், விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X