இறுதிகட்ட படப்பிடிப்பில் விக்ரம்... அசத்தலான அப்டேட்!
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் கைதி மாஸ்டர் என ஹட்ரிக் வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்
இப்பொழுது தனது கலையுலக குருவான கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

குறும்படங்கள் மூலம்
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட்டுகளின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் குறும்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர் .

முன்னணி இயக்குனராக
அதைத்தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று லோகேஷ் கனகராஜ் புகழ் இந்திய அளவில் பரவியது. கைதி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது . கடைசியாக தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியிருந்தார். மாஸ்டர் பான் இந்தியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் இந்த நிலையில் தனது கலையுலக குரு கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

விக்ரம்
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு காரைக்குடி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விக்ரம் படத்தின் அறிவிப்பு வந்தது முதலே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொள்ள மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எனவே ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம்,அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன்,ஸ்வஸ்திகா கிருஷ்ணன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படப்பிடிப்பை முடிக்க
இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது கடந்த வருடம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளது. எனவே பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் விக்ரம் படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் ஏப்ரலில் இந்த படத்தை வெளியிட படக்குழு புயல் வேகத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











