ஜூன் 3 கருணாநிதி பிறந்த நாளில் விக்ரம் ரிலீஸ்..என்ன காரணம்?..கமல் சொன்ன பதில்

சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என இந்திய அளவிலான ஆளுமைகளின் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம்.

Recommended Video

சஸ்பென்ஸை உடைத்த கமல் | Vikram | Kamal Hassan #PressMeet

படத்தை சிறப்பான வகையில் இயக்கியுள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை மிரட்டலாக அமைந்துள்ளன.

படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில் சென்னையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா உள்ளிட்டவர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான நடிகர்களாக உள்ளனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் கவனம் பெற்று சிறப்பா நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அவரது நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதே படத்தின் எதிர்பார்ப்பிற்கு மேலும் சிறப்பான காரணமாக அமைந்துள்ளது. கமலுக்காக இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பிரமோஷன் பணிகள்

பிரமோஷன் பணிகள்

படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதையடுத்து படத்தின் பிரமோஷன் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சமீபத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இரண்டாவது பாடல் ரிலீஸ்

இரண்டாவது பாடல் ரிலீஸ்

முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை ரிலீசான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் நேற்றைய தினம் படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக் வீடியோவும் ரிலீசாகி ரசிகர்களிடையே ஏராளமான வியூஸ்களை பெற்றுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் முதலில் படத்தை மே மாதம் 29ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக தெரிவித்தார். இதற்கு காரணம் கடந்த 1986ல் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் அந்த தேதியில்தான் ரிலீசானதாம்.

விக்ரம் 3 படத்தை இயக்கும் லோகேஷ்

விக்ரம் 3 படத்தை இயக்கும் லோகேஷ்

ஆனால் அந்த தேதி செட் ஆகாத நிலையில் தற்போது ஜூன் 3ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக குறிப்பிட்ட கமல்ஹாசன், அன்றைய தினம் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளாக அமைந்தது தற்செயலானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விக்ரம் 3 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3வது பாகத்தில் சூர்யா

3வது பாகத்தில் சூர்யா

முன்னதாக நடிகர் சூர்யா, இந்தப் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், அடுத்த பாகத்திற்கான லீட் அந்த ரோலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து சூர்யா 3வது பாகத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தப் படத்தை லோகேஷ் இயக்குவதும் உறுதியாகியுள்ளது.

விஜய் படத்தில் லோகேஷ்

விஜய் படத்தில் லோகேஷ்

முன்னதாக விஜய் நடிப்பில் அடுத்தப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளது குறித்து அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இரு வாரங்களில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு சூர்யா -கமல் கூட்டணியில் லோகேஷ் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X