தள்ளிப்போகும் விக்ரம் திரைப்படம்.. பாபநாசம் 2ம் பாகத்தை முடிக்க ஆண்டவர் திட்டவட்டம்
சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் திரிஷ்யம்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி முதல் பாகத்தை போலவே வெற்றி பெற்றது.
திரிஷ்யம் 2ம் பாகம் தமிழிலும் உருவாக உள்ளது. அது குறித்த தகவல்கள் பரவலாக வர தொடங்கியுள்ளன.

தமிழில் மறு ஆக்கம்
திரிஷ்யம் திரைப்படம் தமிழ் மொழியில் பாபநாசம் என்று மறு ஆக்கம் செய்யப்பட்டு நல்ல ஆதரவை பெற்றது. தமிழில் பாபநாசம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், திரிஷ்யம் - 2 வையும் பாபநாசம் - 2 என்ற தலைப்பில் மறு ஆக்கம் செய்யவுள்ளனர்.

விலகும் கௌதமி
பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த கூட்டணி மீண்டும் பாபநாசம் - 2 க்கு இணையவிருந்த நிலையில் கௌதமி விலகியுள்ளதாக தெரிகிறது. கௌதமி ரோலில் நடிகை மீனா அல்லது நதியா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

இந்தியன் 2, விக்ரம்
கமலுக்கு இந்தியன் 2, விக்ரம் என படங்கள் உள்ள நிலையில் எப்போது பாபநாசம் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி இருந்து வந்தது. அதன்படி கமல் பாபநாசம் 2வை முதலில் நடித்து கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 கவலைக்கிடம்
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் டாப் ஹீரோக்களின் கூட்டணியில் தயாராகவுள்ள விக்ரம் & நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ள ஷங்கரின் இந்தியன் 2 என கமலின் படங்கள் கிடப்பில் போடப்படவுள்ளது. இதில் இ இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் டாப் ஹீரோக்களின் கூட்டணியில் தயாராகவுள்ள விக்ரம் , நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ள ஷங்கரின் இந்தியன் 2 என கமலின் படங்கள் கிடப்பில் போடப்படவுள்ளது. இதில் இந்தியன் 2 படத்தின் நிலைமை தான் கவலைக்கிடம். ந்தியன் 2 படத்தின் நிலைமை தான் கவலைக்கிடம்.


Click it and Unblock the Notifications











