விக்ரம் டிரைலர் சுவாரசியம்…புலி…சிங்கம்…சிறுத்தை யாரு ?
சென்னை : ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மிகவும் எதிர்பார்த்த விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலரில் இருக்கும் சுவாரஸ்யத்தை பார்க்கலாமா ?
Recommended Video
கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

விக்ரம்
விக்ரம் படத்தின் இசைவெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய்சேதுபதி, சிலம்பரசன், நரேன், உதயநிதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத்திரைப்படம் ஜூன் 3ந் தேதி வெளியாக உள்ளது.

காடுனு ஒன்னு இருந்தா
இத்திரைப்படத்தின் டிரைலரின் ஆரம்பத்தில், கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டு, ஒரு வீட்டின் முன் ஏராளமானோர் கூடியுள்ளனர். பின்னணியில் அனிருத்தின் இசைமிரட்ட, கமல்ஹாசனின் கர்ஜனைக்குரலில், காடுனு ஒன்னு இருந்தா... சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்குப் போகும் என்று கமல் பேசும் வசனத்தோடு டிரைலர் தொடங்குகிறது.

சிறுத்தை யாரு?
இதில், சிங்கம் என்று சொல்லும் போது விஜய்சேதுபதி வருகிறார். புலி என்னும் போது பகத் பாசில் வருகிறார். சிறுத்தை என்ற போது யாரோ இருட்டுக்குள் நடந்து போவது போல் காட்சிஅமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை யாரு? என்ற கேள்வி இணையத்தில் தற்போது ஆர்வத்தை கிளப்பி உள்ளது.

இவரா இல்லை அவரா?
அந்த சிறுத்தை ஒருவேளை காளிதாஸ் ஜெயராமாக இருக்கலாம் என்றும், இல்லை அது சிறுத்தை நம்ப ஆண்டவர்தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவரா இல்லை அவரா? என மீண்டும் மீண்டும் விக்ரம் டிரைலரை வெறித்தனமாக பார்த்து பிரம்மித்து வருகின்றனர் ரசிகர்கள். படம் வெளியானால் தான் யார் என்பது தெரியவரும்.

அசுரத்தனமான நடிப்பு
கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போட்டி போட்டுக்கொண்டு அசுரத்தனமாக நடித்துள்ளனர்.கேஜிஎப் 2 பெரியப்பா மிஷின் கன் மாதிரி ஒரு மிஷின் கன்னுடன் மடமடவென அனைவரையும் சுட்டுத்தள்ளி... இறுதியில் விக்ரம்... விக்ரம் என்ற கத்தலுடன் டிரைலர் முடிக்கிறது. டிரைலரை பார்த்த ரசிகர்கள், Goosebumps என் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











