ஹாலிவுட்டுக்கே செம டஃப்... விக்ரம் டிரைலர் ரிலீஸ் எங்கே தெரியுமா?

சென்னை : ஹாலிவுட்டுக்கே செம டஃப் கொடுக்கும் வகையில் விக்ரம் படத்தில் டிரைலரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ஜுன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு துவங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. ஜுன் 3ந் தேதி மாதம் வெளியாக உள்ள நிலையில், விக்ரம் படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ். முதல் படத்திலே விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றார். இதையடுத்து, கைதி படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்து உருவான இந்தப்படத்தில் லோகேஷின் தனித்துவமான இயக்கம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இது தான் கதை ?

இது தான் கதை ?

லோகேஷ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்ரம் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் சிறையில் இருக்கும் விஜய்சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் சிறைக்கு செல்கிறார். இதை தடுப்பதற்காக கமல் சிறைக்குள் செல்கிறார். ஆக மொத்தம் மூன்று பேரும் சிறையில் இருக்கின்றனர்.

ஹாலிவுட்டுக்கே டஃப்

ஹாலிவுட்டுக்கே டஃப்

இந்நிலையில், ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கும் வகையில், விக்ரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் வருகிற மே 18-ந் தேதி பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளார்களாம். பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது இதுவே முதன்முறையாகும்.

மிரட்டும் கமல்

மிரட்டும் கமல்

விக்ரம் படத்தில் சண்டையை விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது. விக்ரம் பட கதையை கேட்ட ரசிகர்கள் படம் மிரட்டலா இருக்கும் போல என திரையில் கமலின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜுன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X