கமலுக்கு ஜோடி இருக்கு... முன்னணி ஹீரோயின் நடிக்கறாங்க... இதோ விக்ரம் படத்தோட அப்டேட்ஸ்
சென்னை : உலகநாயகன் கமலை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்திற்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் ஜரூராக நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ள டீசர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துவரும் இந்தப் படத்தில் தற்போது கமலின் நாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல்
உலக நாயகன் கமல் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இடையில் அரசியல் பிரவேசம் காரணமாக அவர் படங்களில் நடிப்பது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

கமலின் ஜோடி
படத்தில் கமலுக்கு ஜோடி உண்டா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. படக்குழுவினர் இதனை சஸ்பென்சாக வைத்திருந்தனர். இந்நிலையில் படத்தில் கமலுக்கு ஜோடி உண்டு என்றும் அந்தப் போர்ஷன் தான் படத்தின் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலுடன் முன்னணி நடிகை ஒருவர் ஜோடி போடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளியான டீசர்
கடந்த ஆண்டில் கமல் பிறந்தநாளையொட்டி டீசர் ஒன்று வெளியானது. இதையடுத்தே படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த கமலின் பிறந்தநாளையொட்டி படத்தின் கிளான்ஸ் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

ஆக்ஷன் த்ரில்லர்
படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துவரும் நிலையில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிவரும் இந்தப் படத்தின் 3 ஷெட்யூல்கள் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
விரைவில் 4வது ஷெட்யூல் சென்னையில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தமாதமும் சென்னையிலேயே படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதோடு படத்தின் சூட்டிங் நிறைவு பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் டீசர் ரிலீஸ்
வரும் பிப்ரவரியில் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கோடைக் கொண்டாட்டமாக ஏப்ரலில் விக்ரம் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் நடித்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











