வாவ்வ்... 32 மொழிகளில் வெளியாகும் விக்ரம் படம்!
Recommended Video

சென்னை : நடிகர் விக்ரம் கர்ணனாக நடிக்கும் 'மஹாவீர் கர்ணா' திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.
முதலில் இந்தியில் மட்டும் உருவாகும் எனக் கூறப்பட்ட இந்தப் படம் தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப் பட இருக்கிறதாம்.
மேலும் படத்தை வேறு 32 மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மஹாவீர் கர்ணா
மகாபாரத கர்ணனை மையப்படுத்தி, 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார்.

300 கோடி பட்ஜெட்
இந்தப்படம் முதன்மையாக இந்தியில் மட்டும் தயாராவதாக சொல்லப்பட்டது. தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது.

32 மொழிகளில் வெளியீடு
அதுமட்டுமல்ல படம் தயாரானதும், 'மஹாவீர் கர்ணா' படத்தை 32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம். உலகளவில் ரசிகர்களிடம் இப்படத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அக்டோபரில் ஷூட்டிங்
இந்த வருடம் அக்டோபர் மாதம் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, 2019-ம் ஆண்டு டிசம்பரில் படம் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான முறையான அறிவிப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications