மூணு நாளில் இவ்ளோ கலெக்ஷனா.. வாய்பிளக்கும் திரையுலகினர்.. மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்த கமல்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது விக்ரம் படம்.

படத்தின் மிரட்டலான காட்சி அமைப்புகள் ரசிகர்களை மிகவும் த்ரில்லாக உணர செய்துள்ளது. காட்சிக்கு காட்சி அவர்கள் சிறப்பான அனுபவத்தை பெற்று வருகின்றனர்.

இந்தப் படம் உலகளவில் மிகவும் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது.

கமல் ரீ-என்ட்ரி

கமல் ரீ-என்ட்ரி

நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வரூபம் 2 படத்தை கொடுத்த அவர் தற்போது விக்ரம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்து தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

சலிக்காத திரைக்கதை

சலிக்காத திரைக்கதை

இந்தப் படத்தை கமலின் ரசிகராக உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில், ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பான த்ரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளன. சிறப்பான திரைக்கதை ரசிகர்களை எந்த இடத்திலும் சலிப்பிற்கு உள்ளாக்காமல் பார்த்துக் கொள்கிறது.

குறையை போக்கிய விக்ரம்

குறையை போக்கிய விக்ரம்

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ரசிகர்களை கவரும் வகையில் எந்தப் படமும் அமையவில்லை. சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த, பீஸ்ட், வலிமை படங்களும் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியுள்ளன. இந்நிலையில் அந்தக் குறையை தற்போது விக்ரம் படம் நிவர்த்தி செய்துள்ளது.

சிறப்பான கேரக்டர்கள்

சிறப்பான கேரக்டர்கள்

படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா முதல் ஷிவானி, காயத்ரி, மைனா நந்தினி, மகேஷ்வரி என சிறிய கதாபாத்திரங்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளதே படத்தின் வெற்றி. அவர்களை சிறப்பாக பயன்படுத்தியதில்தான் இயக்குநரின் வெற்றி அமைந்துள்ளது.

 இயக்குநருக்கு கட்அவுட்

இயக்குநருக்கு கட்அவுட்

இத்தகைய இயக்குநரின் மெனக்கெடலுக்கு சிறப்பான மரியாதையை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். அவருக்கு கட்அவுட் வைக்கும் அளவிற்கு அவர்களது கொண்டாட்டம் காணப்படுகிறது. மேலும் கடந்த 3 நாட்களில் மட்டுமே படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் 150 கோடியை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் ரூ.63 கோடி வசூல்

தமிழகத்தில் ரூ.63 கோடி வசூல்

இந்திய அளவில் படத்தின் கலெக்ஷன்ஸ் கடந்த 3 நாட்களில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதேபோல தமிழகத்தில் மட்டுமே கடந்த 3 நாட்களில் படத்தின் கலெக்ஷன்ஸ் 63 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Recommended Video

Vikram Review | Yessa ? Bussa ? | Kamal Haasan #Review
ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் அதிக வசூலை எட்டிய மற்ற மொழிப்படங்களான கேஜிஎப் 2 மற்றும் பாகுபலி 2 படங்களின் வசூலையை விக்ரம் இன்னும் சில தினங்களில் முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போதே ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X