ரூ.400 கோடி கிளப்பில் விக்ரம்...தொடரும் வசூல் வேட்டை..தூள் கிளப்பும் லோகி – கமல் காம்போ
சென்னை : கமல் நடித்த விக்ரம் படம் 400 கோடி கிளப்பில் இணைந்து மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது. உலக அளவில் விக்ரம் படத்தின் வசூல் வேட்டை நான்ஸ்டாப்பாக போய் கொண்டிருக்கிறது.
Recommended Video
கமலின் தீவிர ரசிகரான டைரக்டர் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஜுலை முதல் வாரத்தில் ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் தற்போது வரை விக்ரம் படத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். அதன் வைப்சை கொண்டாடி வருகின்றனர்.

எதிர்பார்ப்பை மீறிய மிரட்டல்
கமலின் மிரட்டலான நடிப்பு, அதிரடி ஆக்ஷன், த்ரில்லிங், விறுவிறுப்பு என ஹாலிவுட் ரேஞ்சிற்கு தமிழ் படத்தை எடுத்து அசத்தி உள்ளார் லோகேஷ் கனகராஜ். யாரை பாராட்டுவது, எதை விடுவது என தெரியாமல் அப்படி ஒரு பெர்ஃபெக்ஷனை தனது டைரக்ஷனில் காட்டி உள்ளார் லோகேஷ் கனகராஜ். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சியதாக விக்ரம் படம் அமைந்ததால் இதனை ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த குறி ரஜினி படம் தானா
உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டு, வெறித்தனமாக வசூல் வேட்டை ஆடி வருகிறது விக்ரம் படம். ஏற்கனவே கபாலி, பாகுபலி 2, மாஸ்டர், வலிமை படங்களின் வசூல் சாதனையை முறியடித்து விட்டது விக்ரம். இப்போது இந்திய அளவில் அதிகம் வசூலித்த ரஜினியின் 2.ஓ படத்தின் வசூலை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் வேகமாக முன்னேறி வருகிறது விக்ரம். 2.ஓ படம் 655 முதல் 800 கோடிகளை வசூல் செய்தது.

விக்ரம் வசூல் குறைஞ்சுடுச்சா
இந்நிலையில் விக்ரம் படத்தின் வசூல் குறைந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. ஆனால் சினிமா வர்த்தகர்கள் அதை மறுத்து வந்தனர். ஆனால் வசூல் குறைந்ததாக வந்த தகவல் பொய் என நிரூபித்து, வசூலில் மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது விக்ரம் படம். சமீபத்தில் எந்த தமிழ் படமும் செய்யாத அளவிற்கு வேகமாக வசூலில் முன்னேறி வருகிறது விக்ரம்.

400 கோடி கிளப்பில் இணைந்த விக்ரம்
விக்ரம் படம் ரிலீசாகி 23 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.404 கோடிகளை வசூல் செய்துள்ளது. அதிவேகமாக 400 கோடி கிளப்பில் இணைந்து அனைவரையும் மிரண்டு போக வைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.284 கோடிகளை இந்த படம் வசூல் செய்துள்ளது. வெளிநாட்டில் மட்டும் சராசரியாக 120 கோடிகளை வசூல் செய்துள்ளது.

விக்ரம் வசூல் விபரம் இதோ
நான்கு வாரங்களில் 400 கோடி வசூல் செய்த விக்ரம், வழக்கமாக ஒரு நாளைக்கு ரூ.2.75 கோடிகளை தான் இந்தியாவில் வசூல் செய்து வந்தது. ஆனால் நான்காவது வாரத்தில் வார இறுதி நாளான நேற்று மட்டும் விக்ரம் படத்தின் வசூல் 5 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 169 கோடிகளை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது. ஆந்திராவில் 36.75 கோடிகளையும், கர்நாடகாவில் 24 கோடிகளையும் வசூல் செய்துள்ளது.

விக்ரம் வெளிநாட்டு வசூல்
கேரளாவில் 38 கோடிகளை வசூல் செய்துள்ள விக்ரம் படம், இந்தியாவின் மற்ற பகுதிகளில் 16 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளைப் பொருத்தவரை அதிகபட்சமாக அமெரிக்காவில் 3.30 மில்லியன் டாலர்களை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது. சமீப காலங்களில் கோலிவுட் படம் ஒன்று இந்த அளவிற்கு வரவேற்பையும், வசூலையும் பெற்றது விக்ரம் படம் தான்.


Click it and Unblock the Notifications











