twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரம்மாண்ட வரலாற்று படத்திலிருந்து விலகிய விக்ரம்...காரணம் என்ன தெரியுமா

    |

    சென்னை : என்னு நிண்டே மோடியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் ஆர்.எஸ்.விமல், மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்க போவதாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

    விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு சூர்யபுத்ர மகாவீர் கர்ணா என பெயரிடப்பட்டுள்ளது. மகாபாராதத்தில் வரும் கர்ணனின் வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட உள்ளது. முதலில் ப்ருத்விராஜை வைத்து தான் இப்படத்தை இயக்க திட்டமிடப்பட்டது.

    7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!

    ஆனால் கடந்த ஆண்டு விக்ரமின் பிறந்தநாளன்று, விக்ரமின் புதிய தோற்றத்துடன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் சில காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டது. ஆனால் சில காரணங்களால் படம் தொடர்ந்து தள்ளி போகிறது.

    ஹீரோ இல்லாத புதிய டீசர்

    ஹீரோ இல்லாத புதிய டீசர்

    தற்போது இந்த படம், புதிய குழுவுடன் துவங்கப்பட உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ லோகோவை டைரக்டர் விமல் வெளியிட்டார். அதில் ஹீரோவின் முகம் மறைக்கப்பட்டிருந்தது.

    விக்ரம் விலக காரணம்

    விக்ரம் விலக காரணம்

    மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதால், இந்த படத்தில் இருந்து விக்ரம் விலகியதாக கூறப்படுகிறது. விக்ரமிற்கு பதிலாக பாலிவுட் ஹீரோ ஒருவர் சூர்யபுத்ர மாகாவீர் கர்ணா படத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

    ஒரே மாதிரி கேரக்டரா

    ஒரே மாதிரி கேரக்டரா

    பொன்னியின் செல்வன் படத்தில் வரும் விக்ரமின் தோற்றம், கேரக்டரும் இந்த படத்தில் வருவது போலவே இருப்பதால், ரசிகர்களிடம் இது பெரிய அளவில் வரவேற்பை பெறாது என நினைப்பதால் தான் விக்ரம் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. மேலும் கால்ஷீட் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது தான் விக்ரம் விலகியதற்கு காரணம் என கூறப்படுகிறது.

    பிரம்மாண்ட தயாரிப்பு

    பிரம்மாண்ட தயாரிப்பு

    இப்படத்தை இந்தியாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. வசனங்கள் மற்றும் திரைக்கதையை கவிஞர் குமார் விஸ்வாஸ் எழுத உள்ளார்.

    English summary
    vikram had opted out of the movie as he is part of another historical fiction, Ponniyin Selvan directed by Mani Ratnam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X