விக்ரமிடம் சிக்கிய பா. ரஞ்சித்.. மினுக்கி பாடலுக்கு ஆடவைத்ததை நீங்களே பாருங்க
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.மேலும் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு மெட்ரோ நகரங்களுக்கு பயணித்து வருகின்றது.
மெட்ரோ நகரங்களுக்குச் செல்லும் படக்குழு, அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்தான பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்லி வருகின்றனர். மேலும் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது எனவும் கூறி வருகின்றனர். தங்கலான் படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகின்றது. இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படம் ஆகும்.

இந்நிலையில், நேற்று அதாவது ஆகஸ்ட் 6ஆம் தேதி படக்குழு பெங்களூருக்குச் சென்றது. அங்கு ரசிகர்களைச் சந்தித்தது. இந்த சந்திப்பின்போது ரசிகர்கள், படக்குழுவினரை, மினுக்கி மினுக்கி பாடலுக்கு நடனமாடினர். குறிப்பாக, தங்கலான் படத்தின் கதாநாகன் விக்ரம், தங்கலான் படத்தின் வில்லி மாளவிகா மோகனன், படத்தில் ஆங்கிலேயர் காதாபாத்திரத்தில் நடித்துள்ள டேனியல் மற்றும் தங்கலான் படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

மினுக்கி மினுக்கி: ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டின்போது நடன இயக்குநர் சாண்டி மாஸ்டருடன் நடிகை பார்வதி திருவோத்து, இயக்குநர் ரஞ்சித்தின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான அனிதா உள்ளிட்ட பலர் படத்தில் இடம் பெற்றுள்ள மினுக்கி மினுக்கி பாடலுக்கு நடனமாடினர். அதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் பாடலாசிரியர் அறிவு ஆகியோர் தங்கலான் வார் பாடலை பாடினர்.

சிலம்பம் சண்டை: மேலும் படத்தில் கங்கம்மாள் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பார்வதி திருவோத்து, ஆரத்தி கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனும் இணைந்து சிலம்பம் சுற்றினர். முதலில் மாளவிகா மோகனிடம், நீங்கள் யாருடன் சண்டை போட விரும்புகின்றீர்கள் எனக் கேட்டதற்கு, உடனே, தங்கலான் எனக் கூறினார். இறுதியாக தங்கலானின் மனைவியான கங்கம்மாள் (பார்வதி திருவோத்து) உடன் சண்டை போட்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
அரசியல்: இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், கதாநாயகி பார்வதி, " ஆனால் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. தங்கலான் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் ரிலீஸ் ஆவது எதேர்ச்சியாக நடப்பது இல்லை. நாம் மிகவும் சுலபமாக சுதந்திரம், ஆதிக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்தி விடுகின்றோம். ஏற்றத்தாழ்வு ஏன் இருக்கின்றது. அதை நாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அதுதான் அரசியல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கலை எப்போது அரசியலுக்கானது. இயக்குநர் ரஞ்சித் கலை வழியே ஒரு ராணுவத்தை வழி நடத்துகின்றார். அதில் நான் ஒரு வீராங்கனையாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன்" என பேசியிருந்தார்


Click it and Unblock the Notifications











