3டியில் உருவாகும் விக்ரம் - பா.ரஞ்சித் படம்.. டைட்டில் இதுதானா? வெளியான சீக்ரெட்!
சென்னை : கோலிவுட்டின் மிகவும் பிசியான நடிகராக மாறியுள்ளார் நடிகர் விக்ரம்.
சமீபத்தில் இவரது மகான் படம் ஓடிடியில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக கோப்ரா வெளியாக உள்ளது.
இந்நிலையில் விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக காணப்படுகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். தனது மகனே ஹீரோவாக மாறிய நிலையிலும் இவரை அழகான மற்றும் சூப்பர் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சமீபத்தில் வெளியான மகான் படத்தில் இவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்தடுத்த படங்கள்
இந்நிலையில் அடுத்ததாக விக்ரமின் கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்தப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களாக காணப்படுகின்றன. குறிப்பாக கோப்ரா படத்தை அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கு ஏற்றாற்போல இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை எதிர்பார்ப்பை தூண்டும்வகையில் உள்ளன.

பா ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தனது 61வது படத்திற்காக இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுகின்றனர்.

3டி படமாக உருவாகவுள்ள விக்ரம் படம்
இந்தப் படம் 3டியில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்திற்கு மைதானம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஆர்யாவின் சர்பட்டா பரம்பரை படத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருந்தார் பா ரஞ்சித்.

விக்ரம் படத்தின் டைட்டில் மைதானம்?
இந்நிலையில் இந்தப் படத்திற்கு மைதானம் என்று பெயரிடப்படும் சூழலில், இந்தப் படம் விளையாட்டை மையமாக கொண்டு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி குறித்த தகவல்கள் வெளியான சூழலில், ரஜினியின் படங்களில் பிசியானார் ரஞ்சித்.

பிரம்மாண்டமாக உருவாகும் படம்
இந்நிலையில் தற்போது இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான சர்ப்பட்டா பரம்பரை படத்தில் அந்தக் காலகட்டத்திற்கே நம்மை அழைத்து சென்றார் பா ரஞ்சித். இந்நிலையில் இந்தப் படமும் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











