Thangalaan Box Office: தரணி ஆளும் தங்கலான்.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் தங்கலான். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. தங்கலான் படம் இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ் படங்களில் அதிகப்படியான முதல் நாள் வசூலைக் குவித்த படமாக மாறியுள்ளது. அதேபோல், விக்ரம் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தங்கலான் திரைப்படம், கி.பி. 1890 காலகட்டங்களில் கோலார் தங்கவயலில் இருந்து தங்கம் எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்தினர் என்பதும், அவர்களுக்கு ஏற்பட்ட தடங்கல், அதிலிருந்து எவ்வாறு மீண்டு தங்கத்தை எடுக்கின்றனர் என்பதுதான் கதை. இந்தப் படத்தினை பல வரலாற்று பின்னணியில் இருந்து உருவாக்கியுள்ளது படக்குழு. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினை பாராட்டி வருகின்றனர்.

Thangalaan Vikram Pa Ranjith

குறிப்பாக படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பும் வசன உச்சரிப்பும் நம்மை கதை நடக்கும் காலத்திற்கே கொண்டு செல்கின்றன. படத்தின் மற்றொரு பலம் என்றால் அது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார்தான். இந்தப் படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரை படத்தினை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளார்.

Thangalaan Vikram Pa Ranjith

அசோகன்: படத்தில் வரும் அசோகன் கதாபாத்திரம், புத்தர் சிலையில் தலைப் பகுதியை முதலில் எடுப்பதும் அதனை வெட்டி எடுக்கப்பட்ட சிலையில் மீண்டும் இணைப்பது, புத்தர் சிலைக்கு அருகிலேயே எப்போதும் இருப்பது, தங்கம் எடுக்க வந்தவர்களுக்கு எதிராக பேசிக்கொண்டே இருப்பது என இருந்த காட்சிகள் அனைத்தும் வரலாற்றினை அழுத்தம் திருத்தமாக சொல்லும் காட்சிகளாக உள்ளது. இந்தியா முழுவதும் பௌத்தத்தைப் பரப்பியதில் மாமன்னன் அசோகனின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை இந்த காட்சிகள் விளக்குகின்றது.

thangalaan vikram pa ranjith

ஜனரஞ்சகமான சினிமா: ஜனரஞ்சகமான சினிமாவிற்கு இருக்கும் ஒரு சில அம்சங்களான இடைவெளி முடிந்ததும் ஒரு பாடல், படத்தின் தொடக்கத்தில் ஒரு பாடல், க்ளைமேக்ஸில் படத்தின் தீம் கலந்த பாடல் என இந்தப் படத்திலும் பொருந்திப் போயுள்ளது. சாதாரண உரையாடலில் கலந்து வரும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது எனலாம்.

Thangalaan Vikram Pa Ranjith

வரலாறு: நிகழ்காலத்து விக்ரமை அவரது பூட்டன் காலத்துடன் இணைக்க பயன்படுத்திய மாய எதார்த்த வரலாற்றுத் தொடர்புக் காட்சிகள் இந்தியாவின் வரலாற்றினை கொஞ்சம் ஆழமாக தெரிந்துகொள்ளாத ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். மற்றபடி இந்தபடம் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து திரைப்படமாக கொடுத்துள்ளது தங்கலான் படக்குழு.

Thangalaan Vikram Pa Ranjith

வசூல் விபரம்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன தங்கலான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்துள்ளது. இது இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ் படங்களின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். அதேபோல் விக்ரம் நடிப்பில் வெளியான படத்தின் முதல் நாள் வசூலில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இது குறித்த தகவலைப் பகிர்ந்த விக்ரம், " அளவிட முடியாத அன்புக்கு நன்றி. இதைவிட சிறப்பாக எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் இந்தத் தகவலைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: thangalaan vikram pa ranjith
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X