Thangalaan Box Office: ரூ.100 கோடி தங்கலானுக்கு சப்ப மேட்டரு போலயே.. 3 நாளில் இத்தனை கோடிகள் வசூலா?
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகின்றது. இந்நிலையில், முதல் மூன்று நாளில் படத்தின் வசூல் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 26. 44 கோடிகள் வசூல் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் வசூல் அதிகரித்துக்கொண்டே உள்ளது. வார இறுதி நாட்களான நேற்றும் இன்றும் படத்தினைக் காண ரசிகர்கள் திரையரங்கிற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.

படம் பேசும் அரசியலைப் புரிந்து கொண்ட ரசிகர்கள், படம் குறித்து வாய்வழியாகவே, ரசிகர்கள் பேசி பேசி, படத்தினை மற்றவர்கள் பார்க்கவும் ஊக்குவித்து வருகின்றனர். அரசியல் தளத்தில் இருக்கும் பல தலைவர்கள் படத்தினை பாராட்டி வருகின்றனர். படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்துகொண்டு உள்ளனர்.
படம் குறித்த விமர்சனங்களில் மிகவும் முக்கியமானது, படம் பேசும் அரசியல்தான். நாகர்கள், பௌத்தம், பூர்வகுடி மக்கள் என கோலார் தங்கவயலை கதைக்களமாகக் கொண்டும், மாய எதார்த்த திரைக்கதையைக் கொண்டும் படத்தினை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்த காரணங்களுக்காவே படத்தினை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

ஜாக்கெட்: ஜி.வி. பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக பல்வேறு பழங்குடி இன மக்களின் இசையை தேடித்தேடி கோர்த்துக் கொடுத்துள்ளார். பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் மற்றொரு கதாநாயகன், பலம், தூண் என இசையைக் குறிப்பிடலாம். பார்வதியின் நடிப்பு என்பது மெச்சிக்கொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக விக்ரம் உடனான ரொமான்ஸ் காட்சியுலும் சரி, முதல் முறையாக ஜாக்கெட் அணியும் காட்சியிலும் சரி, பார்வதியின் முகபாவனைகளுக்காக படத்தினை இன்னொருமுறை பார்க்கலாம் என பலர் கூறி வருகின்றனர்.

வசூல் விபரம்: படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்தது. இதனை படக்குழுவே தெரிவித்தது. மேலும் 2024ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அமைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாளில் படத்தின் வசூல் ரூபாய் 27.20 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 53. 64 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவே தெரிவித்துள்ளது.
100 கோடி: மேலும் இன்று அதாவது ஆகஸ்ட் 18ஆம் தேதி வாரத்தின் இறுதி நாள் என்பதால், இன்று படத்தின் வசூல் முதல் நாளைப் போல் அதிகமாக இருக்கும் என படக்குழு எதிர்ப்பார்க்கின்றது. இதனால் படத்தின் வசூல் விரைவில் ரூபாய் 100 கோடிகளை எட்டும் என கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











