Thangalaan Box Office: ரூ. 80 கோடிகளை அள்ளிய தங்கலான்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் சியான்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகின்றது. இந்நிலையில், படம் ஆறு நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

thangalaan thangalaan box office collection pa ranjith

படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 26. 44 கோடிகள் வசூல் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் வசூல் அதிகரித்துக்கொண்டே உள்ளது. வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் நன்றாகவே அதிகரித்தது. படத்திற்கு சிலர் எதிர்மறையான விமர்சனங்களைக் கொடுத்து வந்தாலும், படத்திற்கு ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதற்கு காரணம் படம் பேசும் அரசியலைப் புரிந்து கொண்ட ரசிகர்கள், படம் குறித்து வாய்வழியாகவே, ரசிகர்கள் பேசி பேசி, படத்தினை மற்றவர்கள் பார்க்கவும் ஊக்குவித்து வருகின்றனர். அரசியல் தளத்தில் இருக்கும் பல தலைவர்கள் படத்தினை பாராட்டி வருகின்றனர். இதனால் படத்திற்கு விக்ரம் ரசிகர்களைக் கடந்தும், பொதுமக்கள் ரிப்பீட் ஆடியன்ஸாக வந்து படத்தினைக் கொண்டாடி வருகின்றனர்.

Thangalaan Thangalaan Box Office Collection Pa Ranjith

படம் குறித்த விமர்சனங்களில் மிகவும் முக்கியமானது, படம் பேசும் அரசியல்தான். நாகர்கள், பௌத்தம், பூர்வகுடி மக்கள் என கோலார் தங்கவயலை கதைக்களமாகக் கொண்டும், மாய எதார்த்த திரைக்கதையைக் கொண்டும் படத்தினை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்த காரணங்களுக்காவே படத்தினை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விக்ரம் போன்ற உலகம் போற்றும் நடிகரை மிகச் சரியாகப் பயன்படுத்தி அவருக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது மட்டும் இல்லாமல், தான் கூறவந்த கருத்தையும் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஜாக்கெட்: ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக, தங்கலானுக்காக பல்வேறு பழங்குடி இன மக்களின் இசையை தேடித்தேடி கோர்த்துக் கொடுத்துள்ளார். பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, ட்ரெண்ட்டிங்கில் உள்ளது. படத்தின் மற்றொரு கதாநாயகன், பலம், தூண் என இசையைக் குறிப்பிடலாம். பார்வதியின் நடிப்பு என்பது மெச்சிக்கொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக விக்ரம் உடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, முதல் முறையாக ஜாக்கெட் அணியும் காட்சியிலும் சரி, பார்வதியின் முகபாவனைகளுக்காக படத்தினை இன்னொருமுறை பார்க்கலாம் என பலர் கூறி வருகின்றனர்.

thangalaan thangalaan box office collection pa ranjith

வசூல் விபரம்: படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்தது. இதனை படக்குழுவே தெரிவித்தது. மேலும் 2024ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அமைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாளில் படத்தின் வசூல் ரூபாய் 27.20 கோடிகளை வசூல் செய்தது. இதன் மூலம் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 53. 64 கோடிகளை வசூல் செய்தது என படக்குழுவே தெரிவித்தது. இதையடுத்து அடுத்த மூன்று நாட்களிலும் சேர்த்து உலகம் முழுவதும் தங்கலான் கிட்டத்தட்ட ரூபாய் 80 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் படம் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்யும் என படக்குழு நம்புகின்றது.

தங்கலான் 2: அண்மையில் சென்னையில் நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் பேசிய விக்ரம், தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டுமிட்டு வருவதாக கூறினார். இது ரசிகர்களுக்கு ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X