கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் லோக்கல் டானாக நடிக்கும் விக்ரம்!

சென்னை : நடிகர் விக்ரம் இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நடித்துள்ளார்

விக்ரமுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது

மேலும் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம் லீட் ரோலில் நடித்திருக்கிறார்

இப்படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான்

தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க கூடிய நடிகர்களில் நடிகர் விக்ரம் மிக முக்கியமானவர். விக்ரம் திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது இந்த நிலையில் இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். பேட்ட, ஜகமே தந்திரம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களை இயக்கிவரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேங்ஸ்டர் படங்களை கையாளுவதில் மிகச் சிறந்தவர்

காந்திமகான் என்ற கதாபாத்திரத்தில்

காந்திமகான் என்ற கதாபாத்திரத்தில்

இப்பொழுது மகான் படமும் கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகி உள்ளது. ஆதித்யா வர்மா மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரம் மகான் படத்தில் மிரட்டலாக லீட் ரோலில் நடித்து உள்ளார். தந்தை மகன் என இருவரும் இந்த படத்தில் ஒன்றாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் காந்திமகான் என்ற கதாபாத்திரத்தில் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார்.

கள்ளச்சாராயம் ரவுடிசம்

கள்ளச்சாராயம் ரவுடிசம்

மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் தலையாய கடமை என சொல்லிக் கொடுக்கும் விக்ரம் ஒரு கட்டத்தில் சூழ்நிலைகள் காரணமாக தவறான வழியைத் தேர்ந்தெடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சும் லோக்கல் டானாக மாறுகிறார். முதற்பாதியில் மகாத்மா காந்தியின் மீது மிகப்பெரிய பற்று கொண்ட விக்ரம் மகாத்மாவை போல வரவேண்டும் என ஆசைப்பட்டு நேர்மையாக வாழ நினைக்கிறார். பின் சூழ்நிலைகள் அவரை கடைசியில் கள்ளச்சாராயம் ரவுடிசம் என பக்கா லோக்கல் டானாக மாற்றுகிறது .

லோக்கால் டானாக

லோக்கால் டானாக

80 மற்றும் 90களில் நடக்கக்கூடிய கதைக்களம் போல முதல் பாதியில் விக்ரம் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் லோக்கல் டானாக வலம் வந்து கொண்டிருக்க இரண்டாம் பாதியில் தன்னுடைய மகன் துருவ் உடன் நேருக்கு நேர் மோதுகிறார் . இதில் விக்ரம் நெகட்டிவ் ரோலிலும் துருவ் ஹீரோவாகவும் நடித்துள்ளார். விக்ரம், துருவ் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் என பலர் நடித்துள்ளனர். சிம்ரன் விக்ரமின் மாணவியாக நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X