சூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்
Recommended Video

சென்னை: விக்ரம் மற்றும் சூரி வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
விக்ரம் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சூரியும் உள்ளார்.
இந்நிலையில் விக்ரம் காமெடியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விக்ரம்
சாமி ஸ்கொயர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூரி விக்ரம் போன்று வசனம் பேச முயன்று திக்கித் திணற சீயான் வந்து உதவி செய்கிறார். இந்த வீடியோவை விக்ரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். படத்தின் ட்ரெய்லர் வரும் 26ம் தேதி வெளியிடப்படுகிறது.

குறும்பு
சீனியர் ஹீரோவாக இருந்தாலும் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் குறும்புக்காரராக உள்ளார். இதை அவருடன் நடித்த அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தெரிவித்துள்ளனர்.
வைரல்
முன்னதாக விக்ரம், டெல்லி கணேஷ், சூரி ஆகியோர் செல்போனில் எதையோ பார்த்து சிரிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மகள்
நடிகர் சூரி தனது மகள் வெண்ணிலாவின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சூரி தனது மகளுடன் இருக்கும் அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











