உல்லாசம் ரீமேக்: விக்ரம் பிரபு உடன் இணையும் துல்கர் சல்மான்

சென்னை: நடிகர் விக்ரம் பிரபுவும், நடிகர் துல்கர் சல்மானும் உல்லாசம் என்னும் திரைப்படத்தில் இணைந்து நடிக்கப்போவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. இத்திரைப்படத்தை இயக்கவிருப்பது ஜே.டி-ஜெர்ரி. இப்படம் கடந்த 1997ஆம் ஆண்டில் அஜீத் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை இயக்கியதும் ஜே.டி.ஜெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் துல்கர் சல்மான். துல்கர் எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகன். தற்போது அவர் இந்தி சினிமா வரை செல்லப் காரணம் அவரது நடிப்பும் கதைத் தேர்வும் தான்.

Vikram Prabhu and Dulquer Salmaan Acts In Ullaasam Film

தற்போது துல்கர் சல்மானும், பல அதிரடி படங்களை இயக்கிய ரோசன் ஆன்ட்ருஸும் இணைய உள்ளனர். இதில் முதன் முதலாக அதிரடி போலீசாக களம் இறங்குகிறார் துல்கர் சல்மான். ரோசன் ஆன்ட்ருஸ் இதற்கு முன் மும்பை போலீஸ் எனும் ப்ரித்விராஜ் படத்தை இயக்கி உள்ளார்.

மலையாள சினிமாவில் மிக முக்கியமான த்ரில்லர் படங்களில் மும்பை போலீசும் ஒன்று. அது மட்டுமல்லாமல் இவர் எடுத்த அனைத்து படமும் முக்கிய படங்களாக கருதப்படுகிறது. இவர் தமிழில் வெள்ளித்திரை, 36 வயதினிலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் கடைசியாக தமிழில் நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கனேசன் ரோலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். விக்ரம் பிரபுவுக்கு இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற படங்கள் வெற்றி பெற, சினிமாவுக்கு வந்த துவக்கத்திலேயே ஆக்சன் ஹீரோவாகா மாறிவிட்டார். இவர் கடைசியாக பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது அசுர குரு மற்றும் வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .வானம் கொட்டட்டும் படத்தை தயாரித்து வருகிறார் பிரபல இயக்குனர் மணிரத்னம்.

இந்நிலையில், விக்ரம் பிரபு-துல்கர் சல்மான் இணைந்து ஜே.டி-ஜெர்ரி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படம் 1997ஆம் ஆண்டு அஜீத்-விக்ரம் இணைந்து நடித்து வெளி வந்த உல்லாசம் படத்தின் ரீமேக் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விக்ரம் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவும், அஜீத்தின் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தும் வரை காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X