பொன்னியின் செல்வன் டப்பிங்கை முடித்த கந்தன் மாறன்!

சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், நடிகர் விக்ரம் பிரபு தனது டப்பிங்கை முடிந்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான தகவலை விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகி வருகிறது.இப்படம் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு 2020ம் ஆண்டு தொடங்கியபோது கொரோனா தீவிரமானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கியது.

ஏராளமான நட்சத்திரங்கள்

ஏராளமான நட்சத்திரங்கள்

இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

2022ம் ஆண்டு ரிலீஸ்

2022ம் ஆண்டு ரிலீஸ்

வரலாற்றுத் திரைப்படமான இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் முடிவடைந்தது. தற்போது அப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2022ம் ஆண்டு வெளியாக உள்ளது

டப்பிங் முடிந்தது

டப்பிங் முடிந்தது

இந்நிலையில், இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம், சோழ இளவரசன் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, கதையின் நாயகன் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, சோழநாட்டு இளவரசி கதையின் நாயகி குந்தவி கதாபாத்திரத்தில் திரிஷா, கதையின் முக்கிய கதாப்பாத்திரமான நந்தினி மற்றும் மந்தாகினி என்ற இரட்டை கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X