விக்ரம் பிரபுவின் அசுரகுரு.. திரில்லான பேங்க் கொள்ளை.. ஸ்னீக் பீக் ரிலீஸ்!
சென்னை : விக்ரம் பிரபு நடிக்கும் அசுரகுரு படத்திலிருந்து ஸ்னீக் பீக் வெளியாகி உள்ளது.
Recommended Video
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கும் படம் தான் அசுரகுரு. இந்த படத்தில் விக்ரம் பிரபு,மஹிமா நம்பியார்,மனோபாலா,சுப்புராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை ஏ.ராஜ்தீப் இயக்கியிருக்கிறார்.ஜெ.எஸ்.பி சதீஷ் படத்தை தயாரித்து இருக்கிறார்.

அசுரகுரு படத்தின் ஸ்நீக் பீக் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஸ்னீக் பீக்கில் நாயகன் எப்படி காவல்துறை வங்கியின் உள்ளே இருக்கும் போதே கொள்ளையடிக்கிறார் என்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.
இந்த படத்தில் நாயகனுடன் சேர்த்து நாயகியும் திருடியாகவே நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மஹிமா கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சிறந்த த்ரில்லர் படங்களின் நாயகியாகவே நடித்து வருகிறார். இதனால் இவரின் அசுரகுரு படமும் பெரிய எதிர்பார்பில் இருக்கிறது

சாட்டை படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமான மஹிமா தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்ததில் பெரும்பாலான படங்கள் த்ரில்லர் படங்கள் தான். முக்கியமாக குற்றம் 23 மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றவை .

அசுரகுரு படம் விக்ரம் பிரபு படங்களில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விக்ரம் பிரபு வானம் கொட்டட்டும் படம் மூலம் சற்று நன்மதிப்பை பெற்றார். ஆனால் தனி நாயகனாக அவருக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. இதனாலே அசுரகுரு படத்தை விக்ரம் பிரபு எதிர்பார்த்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு மஹிமா கிட்னா படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் தெலுங்கிலும் முதன் முதலில் நடிக்க உள்ளார். நடிகர் விக்ரம் பிரபு அசுரகுரு படத்திற்கு பிறகு மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











