அடக்குமுறையை எதிர்க்கும் டாணாக்காரன்... வெளியானது எதிர்பார்ப்பை எகிறவைக்கும் டீசர்
சென்னை : புலிக்குத்தி பாண்டி படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்தபடமாக உருவாகியுள்ளது டாணாக்காரன்.
வெற்றிமாறனின் உதவி இயக்குநர் தமிழரசன் இயக்கத்தில் படம் உருவாகி வருகிறது. எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார்.
1997ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

புலிக்குத்தி பாண்டி படம்
நடிகர் விக்ரம் பிரபு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னை சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

வெற்றிமாறன் உதவி இயக்குநர்
இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் டாணாக்காரன் படம் உருவாகி வருகிறது. வெற்றிமாறனின் உதவி இயக்குநர் தமிழரசன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

போலீஸ் பயிற்சி சம்பவம்
கடந்த 1997ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. போலீஸ் பயிற்சியின்போது ஒரு இளைஞர் சந்திக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய டீசர்
கடந்த மார்ச் மாதத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தும்வகையில் இந்த டீசர் அமைந்துள்ளது. வெற்றிமாறனின் பட்டறையில் இருந்து வெளிவந்துள்ள தமிழரசனின் கைவண்ணத்தில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் சிறப்பான படத்தை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











