சத்தியமா சொல்றேன் படம் அருமை… “டாணாக்காரன்“ ட்விட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேற்று இரவு வெளியானது.

இயக்குநர் தமிழின் மேக்கிங், நடிகர்களின் பங்களிப்பு, புதிய கதைக்களம் என படத்தைப்பார்த்த ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் மற்றும் லால் ஆகியோர் முதன்மை வேடங்களிலும், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

டாணாக்காரன்

டாணாக்காரன்

காவல் துறை சார்ந்த எண்ணற்ற திரைப்படங்களை தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், டாணாக்காரன் பார்வையாளர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய பார்வையையும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கி உள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டாணாக்காரன் திரைப்படத்தை ட்விட்டரில் புகழ்ந்து வருகின்றனர்.

சத்தியமா சொல்றேன் படம் அருமை

சத்தியமா சொல்றேன் படம் அருமை

காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகளை படம் வெளிச்சம் போட்டுக்காட்டி உள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான படத்தைப்பார்த்த ரசிகர் ஒருவர், யோவ் இது மாறி படம் பண்ணுயா, நீ எங்கையோ போய்டுவா படம் அருமை சத்தியமா சொல்றேன். குப்பைமாதிரி படத்தை இனி பண்ணாதே. டீம் முழுவதற்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

தரமான பாட்டு

தரமான பாட்டு

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், ஃபிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். ஒரு இணையவாசி, அண்ணா படம் செமயா போய்ட்டு இருக்கு பாட்டு செம, படம் சூப்பர் என்பது போல பதிவிட்டுள்ளார்.

நல்ல படைப்பு

நல்ல படைப்பு

நல்ல படைப்பை ஓடிடியில் ரிலீஸ் பண்ணி ஏமாத்தீடீங்களே விக்ரம் பிரபு, குறிப்பாக டாணாகாரன் தியேட்டர் அனுபவம் மிஸ்ஸிங். திரையரங்கில் வந்து இருந்தால் தரமாக இருந்து இருக்கும் என்று ஒரு நெட்டிசன்ஸ் தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.

ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல படம்

ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல படம்

ரொம்ப நாள் கழிச்சி நீங்க நடித்த நல்ல படம் இது. இந்த மாஸ் படத்தை போய் ஓடிடியில் ரிலீஸ் பண்ணியிருக்கீங்களே என்று, விக்ரம் பிரவுவின் தீவிரரசிகர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். திரையரங்கில் வெளியாகி இருந்தால் கொண்டாடி இருப்பார்கள் கூறி,. டோடலி அப்செட் என பதிவிட்டுள்ளார்.

தம்பி நீங்க ஜெயிக்கனும்

தம்பி நீங்க ஜெயிக்கனும்

தம்பி நீங்க ஜெயிக்கனும்னு நான் தினமும் நினைக்கிறேன். நடிப்பு என்ற நான்கெழுத்து நாயகனின் பேரன் நீங்கள். மூன்றாம் தலைமுறை நடிகனும் ஜெயிக்கனும். வாழ்த்துகள் தம்பி என மனதார வாழ்த்தி பாராட்டி உள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் உழைப்பு காட்சிக்கு காட்சி பேசப்படுவதால் விக்ரம்பிரபுவின் சினிமா பயணத்தில் இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேககம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X