கடினமான உழைப்பால் ஜெயித்த ‘‘டாணாக்காரன்“… இப்படி புகழ்ந்த விஐபி யார் தெரியுமா ?
சென்னை : ஜெய் திரைப்படத்தில் கொடூர காவல்துறை அதிகாரியாக வந்து, நம்மை அச்சத்தில் ஆழ்த்திய தமிழ், டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார்.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேற்று இரவு வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

இயக்குநர் தமிழ்
அறிமுக இயக்குநர் தமிழ், இயக்குநர் வெற்றிமாறனிடம் விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை, உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.அசுரன் படத்தில் வில்லனாகவும், இயக்குநர் தமிழ், போலீஸாக இருந்தவர் என்பதால் படத்தை ரசித்து ரசித்து செதுக்கி உள்ளார். பல இடங்தகளில் அவரின் மெனக்கெடல் தெரிகிறது.

உண்மை சம்பவம்
காவலர்களின் பயிற்சி முகாமில் நடைபெறக்கூடிய உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. காவலர்கள் மீதான மக்கள் பார்வையை இந்த படம் நிச்சயம் மாற்றும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

4 மொழிகளில்
இந்தப் படம் மொழிகளை கடந்து அனைத்து மாநில மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. "150 வருஷமா சட்டையை கூட மாத்தாத டிபார்ட்மெண்டோட சட்டத்தை மாத்தபோறேனு சொல்ற என வசனம் உண்மையில் நம்மை யோசிக்கவைக்கும் வசனமாகவே உள்ளது.

கடினமான உழைப்பால்
இந்நிலையில்,இத்திரைப்படத்தை பார்த்த மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டாணாக்கரன் கடின உழைப்பால் மட்டுமே காவல்துறைக்குள் நுழைய முடியும் என்பதை இயக்குநர் தமிழ், ஒரு முன்னாள் காவலர் என்பதால் அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை புகழ்ந்துள்ளார்.

அழுத்தமான கதை
நீண்ட நாட்களுக்குப்பிறகு விக்ரம்பிரபு ஒரு அழுத்தமான கதையை தேர்வு செய்து தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். பயிற்சி அதிகாரியாக வரும் லால் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது போன்ற திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











