Sirai Blue Sattai Maran Review: சிறை விமர்சனம்.. பாராட்டிவிட்டு ஓ.கே ரகம்னு சொன்ன ப்ளூ சட்டை மாறன்

சென்னை: நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி நாளை அதாவது டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ள படம் சிறை. படத்தில் விக்ரம் பிரபுவுடன், எல்.கே. அக்‌ஷய் குமார், அனீஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். இந்த படம் சிறப்பு திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் படம் பார்த்த பலரும் படம் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " தமிழ் சினிமாவில் காவல்துறை குறித்த படங்களில் உண்மைக்கு நெருக்கமான படங்களில் ஒன்று, டாணாக்காரன். அந்த படத்தின் கதை எழுதி இயக்கிய தமிழ், இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் பணியாற்றி உள்ளார். தமிழ் அடிப்படையில் காவல் துறையில் பணியாற்றியவர்.

படத்தின் கதையைப் பொறுத்தவரை ஆயுதப்படையில் தலைமை கான்ஸ்டபிளாக விக்ரம் பிரபு உள்ளார். அவருக்கு கீழ் இருவர் உள்ளனர். அவர்களின் வேலை, வேலூர் சிறையில் இருக்க கூடிய கைதிகளை அழைத்துக் கொண்டு சென்று, சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு, மீண்டும் சிறைக்கு அழைத்து வரவேண்டும். இதில் இடையில் கைதி தப்பித்தாலோ, கொல்லப்பட்டாலோ இவர்களின் வேலைக்கு பிரச்னை வந்துவிடும். இவர்கள் அழைத்துச் செல்லும் இளம் வயதுடையவருக்கு இவர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல வேண்டும். இதில் அந்த பையன் தப்பித்தானா? இல்லையா? அதற்கு என்ன நோக்கம்? அதற்கடுத்து என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

Vikram Prabhu Sirai Movie Blue Sattai Maran Review He Appreciates Whole Cast And Crew And Movie
Photo Credit:

காவல்துறை: காவல்துறையில் டிரைனிங் எல்லாம் முடித்துவிட்டு வேலைக்கு வரும் காவல்துறையினருக்கு வேலை எப்படி இருக்கும் என்பதில் தான் இந்த கதை இருக்கிறது. நீதிமன்றக் காட்சிகள் சிறப்பாக செய்துள்ளார்கள். படத்தில் வரக்கூடிய லவ் போர்ஷன் மட்டும் கொஞ்சம் பழசாக மாறிவிட்டது. ஆனால் காவல் துறையில் உள்ளவர்களுக்கு இடையிலான உரையாடலை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். காவல்துறையில் பயன்படுத்திக் கொள்ளும் தொழில்முறை வசனங்களும் சிறப்பாக இருந்தது.

நடிப்பு: படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். அதேபோல் சிறிய கதாபாத்திரத்திற்கும் சின்ன சின்ன காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார்கள். விக்ரம் பிரபு கதாபாத்திரம் அவருக்கு அளவு எடுத்து வைத்தது போல இருந்தது. மற்ற படங்களில் இருந்து இந்த படத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவது ஒரு காட்சிதான். அந்த காட்சியில் மூணாறு ரமேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளது அவர்தான். அவரது கதாபாத்திரம் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது டயலாக்குகளுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் கிடைக்கும்.

பாராட்டு: படத்தின் மற்றொரு முக்கியமான பலம் என்றால் அது படத்தின் பின்னணி இசையை சொல்லலாம். பாடல்கள் தான் மனதில் நிற்கும் அளவுக்கு இல்லை. சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவு தொடங்கி எல்லாமே நன்றாக இருந்தது. எடிட்டிங் உள்ளிட்ட அனைத்தும் நன்றாக இருந்தது. மற்ற படங்களில் இருந்து இந்த படம் எதை நினைவு படுத்துகிறது என்றால், படத்தில் இருக்க கூடிய மெல்லிசான மத அரசியல். இளம் காதல் ஜோடிகளின் போர்ஷனை மட்டும் கொஞ்சம் வலுவாக எடுத்திருந்தால் ரொம்பவும் நல்ல படம் என்று சொல்லி இருக்கலாம். ஆனாலும் படம் ஓ.கே ரகமான படமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X