Sirai : இந்த ஆண்டின் சிறந்த படம் சிறை.. தியேட்டருக்கு போய் பாருங்க.. பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: விக்ரம் பிரபு, எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா, அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா, மூணார் ரமேஷ், பி. எல். தேனப்பன் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் சிறை. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் தியேட்டரில் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.
2025ல் வெளியான படங்களில் சிறை திரைப்படத்தை ஒரு சிறந்த படம் என்று சொல்லலாம், கதை மிகவும் அழகாக இருந்தது அதைவிட படத்தின் திரைக்கதை ரசிக்கும் படியாக இருந்தது. விக்ரம் பாபுவின் நடிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கும் அளவில் இருந்தது ஒரு தரமான திரைப்படத்தை இயக்குனரும் தயாரிப்பாளரும் சேர்ந்து கொடுத்து இருக்கிறார்கள். 2025ஆம் ஆண்டு முடியும் போது ஒரு சூப்பரான அட்டகாசமான திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார்கள். இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்த பட குழுவினருக்கு நன்றி என்றார்.

இந்த ஆண்டின் சிறந்த படம்: சிறை படம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. விக்ரம் பிரபு தரமான ஒரு திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். விக்ரம் பிரபு இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு முதலில் அவரை பாராட்ட வேண்டும். படத்தின் தயாரிப்பாளரின் மகன் இந்த படத்தில் ஒரு ரோலில் நடித்திருக்கிறார். அவரும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்த இருக்கிறார். படம் வேற லெவலில் இருக்கிறது அனைவரும் இந்த திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்றார்.
சூப்பர் படம்: படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எந்த இடத்திலும் லேக் இல்லை. ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி உள்ளது. ஹீரோயின், ஹீரோ, மியூசிக் என அனைத்தும் அல்டிமேட். காவல்துறையை பற்றி இப்படி ஒரு கதையை எடுத்து ஒவ்வொரு காட்சியிலும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். சிறைக்கும் நடக்கும் ஒரு விஷயத்தை பெரிய அளவில் காட்டி இருக்கிறார்கள். நீண்ட நாளுக்கு பிறகு நல்ல படம் பார்த்த மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை நிச்சயமாக அனைவரும் குடும்பத்தோடு சென்று தியேட்டரில் பாருங்க என்றார்.
பீல் குட் மூவி: சிறை படத்தை தியேட்டரில் பார்த்த ஒரு ரசிகை நல்ல பீல் குட் மூவி. படத்தில் நடித்த அனைவருமே சூப்பராக நடித்து இருக்கிறார்கள். படம் பார்க்கும் போது அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்று நாங்க ஒரு விஷயத்தை யோசித்தால், அதெல்லாம் இல்லை என்பது போல இயக்குநர் ஒரு ட்விஸ்டை வைத்து தெறிக்கவிட்டுவிட்டார். தயாரிப்பாளர் லலித்தின் மகன் இந்த படத்தில் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால், அவருக்கு முதல் படம் போலவே தெரியாத அளவிற்கு மிரட்டி இருக்கிறார் என்றார்.


Click it and Unblock the Notifications











