விஜய்யின் துப்பாக்கி விக்ரம் பிரபு கைக்கு துப்பாக்கி முனையா போயிருச்சே
வி.கிரியேஷன்ஸ் தாணு தயாரிக்கும் புதிய படத்துக்கு 'துப்பாக்கி முனை' என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் வைத்திருந்த துப்பாக்கி விக்ரம் பிரபு கைக்கு போய்விட்டது.
சென்னை: விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது 'துப்பாக்கி முனை' என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ். தற்போது விக்ரம் பிரபுவை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.
ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார்.
விக்ரம் பிரபு துப்பாக்கி முனை
இந்நிலையில் 'துப்பாக்கி முனை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. துப்பாக்கி முனையில் கைதிகளைக் குறி வைத்து என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தோட்டாக்கள் கதை சொல்லும்
இதை உறுதி செய்யும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 33 பேரை கொலை செய்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு புல்லட்டும் ஒரு கதை சொல்லும் என்று படத்தின் கேப்சன் சொல்கிறது.

தாணு தயாரிப்பில் துப்பாக்கி முனை
'துப்பாக்கி முனை' தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நாயகி யார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி இதை தயாரித்தவரும் கலைப்புலி தாணுதான்.

ட்விட்டரில் ட்ரெண்ட்
துப்பாக்கி முனை என்று படத்தின் பெயரையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்ட உடனேயே ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. விஜய் கையில் வைத்திருந்த துப்பாக்கியை விக்ரம் பிரபு கையில் கொடுத்து விட்டார் தாணு என்று கமெண்ட் அடிக்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











