நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படம் பராசக்தி ரிலீஸ் ஆன நாள் இன்று.. ட்வீட் போட்ட பாசக்கார பேரன்!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி படம் ரிலீஸான நாள் இன்று.

இயக்குநர்கள் பஞ்சு மற்றும் கிருஷ்ணன் இணைந்து இயக்கிய இந்த் திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதி இருந்தார்.

சக்சஸ் என சிவாஜி கணேசன் இந்த படத்தில் பேசிய முதல் வசனம் அவரது வாழ்க்கை முழுவதும் சக்சஸ் வர காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

70வது ஆண்டு

70வது ஆண்டு

1952ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியான பராசக்தி ரிலீசாகி இன்றுடன் 69 ஆண்டுகளை நிறைவு செய்து 70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 70 ஆண்டுகள் என்ன இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், "இந்த நீதிமன்றம் பல விசித்திரமனா வழக்குகளை சந்தித்து இருக்கிறது" எனும் வசனம் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகவே எப்போதும் இருக்கும்.

சமூக படம்

சமூக படம்

தமிழ் சினிமாவில் ராஜா அரிச்சந்திரா, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட ராஜா காலத்து புராண படங்களே திரையில் வெளியாகி வந்த நிலையில், சமூக படமாக வெளியாகி மிகப்பெரிய சரித்திர வெற்றி படைத்தது பராசக்தி திரைப்படம். அந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும், பாடல்களும் சமூக நோக்கத்துடன் வெளியாகி இன்றளவும் ஹீரோக்கள் தத்துவ பாடல்களை பாட முன்னோடியாக அமைந்தது அந்த "கா.. கா" பாடல் தான்.

நடிகர் திலகம்

நடிகர் திலகம்

முதல் படத்திலேயே தான் ஒரு நடிகர் திலகம் என்றும் தமிழ் சினிமா பல நூறு ஆண்டுகள் தன்னை கொண்டாடப் போகிறது என்றெல்லாம் நினைக்காமல் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக செய்து அசத்தியதால் சிவாஜி கணேசன் இன்றளவும் நடிகர் திலகமாக மக்கள் மத்தியில் போற்றப்படுகிறார். சிவாஜி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது "பராசக்தி ஹீரோ டா" என்கிற வசனம் தானே!

மறக்காத பேரன்

மறக்காத பேரன்

தமிழ் சினிமாவின் காலத்தினால் அழியாத பொக்கிஷம் பராசக்தி படம் வெளியான நாள் இன்று என்பதை தமிழ் ரசிகர்களுக்கு ட்விட்டரில் சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான நடிகர் விக்ரம் பிரபு ட்வீட் போட்டு நினைவு படுத்தி உள்ளார். அவரது ட்வீட்டை பார்த்த ஏகப்பட்ட ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த படம் பராசக்தி என கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இந்த ஆண்டு நேரடியாக சன் டிவியில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் வெளியானது. டானாக்காரன், பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அப்பா பிரபுவுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X