Love Marriage X Review: டாணாக்காரன் படத்துக்குப் பிறகு சூப்பர் படம்.. லவ் மேரேஜ் ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: 33 வயதாகியும் திருமணம் ஆகாத விக்ரம் பிரபுவுக்கு நடக்கும் காதல் திருமணம் தான் இந்த 'லவ் மேரேஜ்' படத்தின் கதை என படம் பார்த்தவர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். வரும் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் விக்ரம் பிரபு நடித்துள்ள லவ் மேரேஜ் திரைப்படம் வெளியாகிறது.
நேற்று கோவையில் படத்தின் ப்ரீமியர் ஷோ வெளியான நிலையில், விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் படம் எப்படி இருக்கிறது என்றும் அதில், உள்ள நிறைகள் மற்றும் குறைகளை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து வந்தார். அடுத்து அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் சொதப்பிய நிலையில், சரியான கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், டாணாக்காரன் படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள சிறப்பான படம் என படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்தவர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர். அதுகுறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
வெற்றியை தேடும் விக்ரம் பிரபு: பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான கும்கி படத்தின் மூலம் "அய்யய்யோ ஆனந்தமே" என தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசன், பிரபு போல இவரும் சினிமாவில் சூப்பரான ஹீரோவாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு என தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. வாகா, வீர சிவாஜி, நெருப்புடா உள்ளிட்ட படங்கள் சொதப்ப தொடங்கின. அதன் பின்னர் 2022ல் டாணாக்காரன் படத்தில் இவரது நடிப்பு மீண்டும் பேசப்பட்டது. 2023ம் ஆண்டு வெளியான இறுகப்பற்று படமும் இவருக்கு கைகொடுத்தது. சோலோவாக பெரிய வெற்றியை தேடி வரும் விக்ரம் பிரபு நடிப்பில் நாளை லவ் மேரேஜ் படம் வெளியாகிறது. அடுத்த மாதம் அனுஷ்காவுடன் இவர் நடித்துள்ள காதி திரைப்படமும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
லவ் மேரேஜ் ட்விட்டர் விமர்சனம்: முதல் பாதியில் ஃபீல் குட் ஃபேமிலி படமாக இருந்த லவ் மேரேஜ் திரைபப்டம் இரண்டாம் பாதியில் சீரியஸான கதைக்குள் சென்று கடைசியில் சுபம் போட்டு முடிக்கின்றனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகி இருக்கிறது. எந்தவொரு ஆபாச காட்சிகளோ, தேவையற்ற சீன்களோ படத்தில் இல்லை. 10க்கு 6.7 ரேட்டிங் கொடுத்து இந்த நெட்டிசன் படத்தை பாராட்டியிருக்கிறார்.
ரமேஷ் பாலா ட்வீட்: கோவையில் நேற்று நடைபெற்ற ப்ரீமியர் ஷோவில் பலரும் படத்தை பாராட்டியுள்ளனர். நாளை முதல் திரையரங்குகளில் விக்ரம் பிரபு நடித்துள்ள லவ் மேரேஜ் திரைப்படம் வெளியாகிறது. நல்ல ஃபேமிலி டிராமா படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என்றால் இந்த படத்தை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.
நிச்சயதாம்பூலம் படத்தை போல: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நிச்சயதாம்பூலம் படத்தில் எப்படி நடித்திருந்தாரோ அந்த படத்தை பார்த்தது போலவே ஒரு செம ஃபீலிங் கொடுத்திருக்கிறது என படத்தை பார்த்த பொதுமக்களும் பப்ளிக் ரிவ்யூவில் கூறியுள்ளனர். விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் வொர்க்கவுட்டானால் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு டூரிஸ்ட் ஃபேமிலி போல வெற்றி கிடைக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டாணாக்காரன் படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பு சிறப்பாக உள்ளது என்றும் அவருக்கு சரியான கம்பேக் படமாக இது இருக்கும் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











