Sirai Day 1 collection: விக்ரம் பிரபுவின் சிறை.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஆயுதப்படை போலீசாரின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்ப்டடுள்ள சிறை திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தை இயக்கி இயக்குநராக களமிறங்கி உள்ளார். இதில்,விக்ரம் பிரபு, புதுமுகம் அக்ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் தயாரித்து இருக்கும் இப்படத்தின் முதல் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.

ஆயுதப்படை காவல் துறையில் ஏட்டாக இருக்கும் விக்ரம் பிரபு, சிறையில் உள்ள கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வேலை பார்க்கிறார். ஒருமுறை 9 கொலை செய்த ஒருவனை விக்ரம் பிரபு வேலூரில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது, சிலர் விக்ரம் பிரபு மீது மிளகாய் பொடிகளை தூசி அவனை தப்பிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். அப்போது, விக்ரம் பிரபு தனது கையில் இருக்கும், துப்பாக்கியை வைத்து அந்த கைதியை சுட்டுவிடுகிறான். அதில் அந்த கைதியும் இறந்துவிடுகிறான். இதனால் விக்ரம் பிரபு மீதும், அவருடன் சென்ற மற்ற இரு போலீசார் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது. பொது இடத்தில் துப்பாக்கியால் சுட உங்களுக்கு உத்தரவு போட்டது யார் என ஒரு பக்கம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது
சிறை படத்தின் கதை: இந்த நேரத்தில் 5 வருடங்களாக சிறையில் இருக்கும் அப்துல் ரஊப் என்பவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. விக்ரம் பிரபு மற்றும் இரண்டு போலீசார் இணைந்து அப்துலை அழைத்து செல்கிறார்கள். அப்போது. விக்ரம் பிரவுவிடம் இருந்து அப்துல் தப்பித்து விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் சிறை திரைப்படத்தின் கதை. இதில் சுரேஷ் ராஜகுமாரி அறிமுக இயக்குநராக இருந்தாலும் அழுத்தமான கதையை மனதில் பதியும்படி ஆண்டின் இறுதியில் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார் என படம் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
முதல் நாள் வசூல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நேற்று தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ஒரு கோடியை வசூலித்துள்ளது. படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











