விரைவில் ‘விக்ரம் பார்ட் 3‘.. மேடையில் சஸ்பென்சை உடைத்த கமல்ஹாசன் !

சென்னை : விக்ரம் பார்ட் 3 விரைவில் உருவாக இருப்பதாக விக்ரம் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

சஸ்பென்ஸை உடைத்த கமல் | Vikram | Kamal Hassan #PressMeet

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி நாராயணன்,அர்ஜுன் தாஸ்,மைனா நந்தினி, கௌரவ தோற்றத்தில் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் ஜூன் 3ந் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம்

விக்ரம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.

கேன்ஸ் விழாவில்

கேன்ஸ் விழாவில்

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனுக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் அந்த திரைப்பட விழாவில் விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. பிரம்மாண்டமான இந்த ட்ரெயிலரைப் பார்த்து அனைத்து தரப்பு ரசிகர்களும் வெகுவாக புகழ்ந்தனர்.

இன்னும் சில நாட்களில்

இன்னும் சில நாட்களில்

இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள விக்ரம் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துரையில் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். படத்தின் புக்கிங்கிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் 3? இந்தியன் 2 ?

விக்ரம் 3? இந்தியன் 2 ?

சென்னையில் இன்று விக்ரம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் செய்தியாளர் ஒருவர், விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் த்ரீயா? அல்லது இந்தியன் 2 ? வெளியாகுமா என்ற கேள்வியை எழுப்பினார்.

விக்ரம் 3

விக்ரம் 3

இதற்கு பதிலளித்த கமல், இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் 3 பற்றி லோகேஷ் கனகராஜ் தான் முடிவு செய்ய வேண்டும், ஏன் என்றால் விக்ரம் 3க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர் என்பதை தான் முடிவு செய்து விட்டேன் என்று மேடையிலேயே சஸ்பென்சை உடைத்தார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X