twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலை பார்த்து தான், சினிமாவை கற்றுக்கொண்டேன்.. மேடையில் நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ் !

    |

    சென்னை : கமல்ஹாசனை பார்த்து தான், சினிமாவை கற்றுக் கொண்டேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Surya, Vijay Sethupathi லாம் என் மாணவர்கள் இல்ல ! | Kamal Haasan | Lokesh Kangaraj | #Kollywood

    மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தி இயக்கி உள்ளார்.

    என்னது கேஜிஎஃப்-3 வர 8 ஆண்டு ஆகுமா?....பிரஷாந்த் நீலுக்கு உள்ள பிரச்சினை இதுதானா? என்னது கேஜிஎஃப்-3 வர 8 ஆண்டு ஆகுமா?....பிரஷாந்த் நீலுக்கு உள்ள பிரச்சினை இதுதானா?

    இப்படத்தில், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, கௌரவ தோற்றத்தில் சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 3ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விக்ரம்

    விக்ரம்

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படதிலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடி பாடல் பத்தல பத்தல சாங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் சர்ச்சையை கிளப்பினாலும் பாடல் மிகப்பெரிய அளவில் டிராண்டாகி வருகிறது.

    செய்தியாளர்கள் சந்திப்பு

    செய்தியாளர்கள் சந்திப்பு

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் மட்டுமே பங்கேற்றனர்.

    கமலுக்கு நன்றி

    கமலுக்கு நன்றி

    நிகழ்வில் மேடையில் பேசிய இயக்குநர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசனை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். என்னுடைய முதல் நன்றி கமல்ஹாசனுக்கு தான். விக்ரம் திரைப்படத்தில் திருப்திகரமான விஷயம் ஒன்று நடந்துள்ளதாகவும் படத்தை பார்த்தால் புரியும் என்றும் லோகேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    வெற்றியின் உச்சம்

    வெற்றியின் உச்சம்

    இதைத்தொடர்ந்து, கமல்ஹாசனிடம் விக்ரம் அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், நல்ல சினிமாவுக்கும், வர்த்தக வெற்றிக்கும் பாலம் போட வேண்டும் என்று 40 வருடமாக தொடர்ந்து வேலை செய்து அதில் வெற்றியும் அடைந்து வருகிறேன். அந்த வெற்றியின் உச்சகட்டமாக இதை நினைத்துக்கொள்கிறேன் என்றார்.மேலும், நான்கு வருடங்களான ரசிகர்களை காக்கவைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    English summary
    Vikram Press meet : விக்ரம் செய்தியாளர்கள் சந்திப்பு, கமலுக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X