Vikram - இதையெல்லாம் செஞ்சாதான் புரோமோஷனுக்கு வருவோம்.. கண்டிஷன் போட்டாரா விக்ரம்

சென்னை: Vikram (விக்ரம்)பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோஷனுக்கு வர தயாரிப்பு நிறுவனத்திடம் விக்ரம் ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Vikram Put The Conditions to Lyca for Ponniyin selvan 2 promotions

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். பாகுபலி போன்ற சரித்திர கதைகள் ஹிட்டானதை அடுத்து பொன்னியின் செல்வனை ஏன் படமாக்கக்கூடாது என்ற விவாதம் மீண்டும் பலமாகவே எழுந்தது. இதற்கிடையே கமல் ஹாசன், எம்ஜிஆர் போன்றோரும் அந்த நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.

சாத்தியமாக்கிய மணிரத்னம்: சூழல் இப்படி இருக்க பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்குவார் என்றும், லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

Vikram Put The Conditions to Lyca for Ponniyin selvan 2 promotions

வசூலை குவித்த முதல் பாகம்: படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக சிலர் படத்தில் குறை கூறினாலும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று ரசித்தனர் ரசிகர்கள். வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று.

பொன்னியின் செல்வன் 2: இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இந்தப் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படம் வெளியாக இன்னும் பத்து நாள்களுக்குள்ளாகவே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளன. இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சென்றுவருகின்றனர். நேற்றுகூட டெல்லிக்கு அவர்கள் சென்றிருந்தனர்.

Vikram Put The Conditions to Lyca for Ponniyin selvan 2 promotions

விக்ரம் போட்ட கண்டிஷன்?: சூழல் இப்படி இருக்க படத்தின் புரோமோஷனில் கலந்துகொள்வதற்கு நடிகர் விக்ரம் கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு புரோமோஷனில் கலந்துகொள்ள நாங்கள் வரவேண்டுமென்றால் தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என லைகா நிறுவனத்திடம் விக்ரம் கேட்டுக்கொண்டதாகவும்;

அதன்படிதான் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் அதற்காக செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X