Don't Miss!
- News
"முதலிரவு".. பெண்ணை கடித்து குதறிய மாப்பிள்ளை.. "திருநங்கையா"?.. முரட்டுத்தனமான வக்கிர நபர் கைது
- Finance
என்னது இந்த நிறுவனத்துடைய வயது 234-ஆ..!!
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Automobiles
வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விக்ரம் ரன்னிங் டைம் வந்தாச்சு... கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்
சென்னை : கமலின் விக்ரம் பட ரிலீசை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய அப்டேட்டாக படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் இந்த படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
என்னது...விக்ரம்
பார்ட்
3
வருதா...
கமல்
சொன்ன
அட்டகாசமான
தகவல்?

சூர்யா ரோல் என்ன
விக்ரம் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூர்யா நடித்திருக்கிறார், அவர் தான் கதையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார் என கமலே சொல்லி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்ரம் படம் பற்றி வெளியாகி வரும் ஒவ்வொரு தகவலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது.

கைதி 2 வில் நடிக்கிறார் சூர்யா
விக்ரம் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவலே படத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. அதுவும் சூர்யாவின் கேரக்டர் கைதி 2 படத்தின் ஆரம்பம் என கூறப்படுவதால் சூர்யாவின் கேரக்டர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்
பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ள விக்ரம் படத்தின் தெலுங்கு, இந்தி டிரைலர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து விக்ரம் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, அனைவரின் வரவேற்பையும் பெற்றது. அனைவரின் பாராட்டையும் பெற்று, எதிர்பார்ப்பை தூண்டிய விக்ரம் படம் எப்போது ரிலீசாகும் என அனைவரும் காத்துகிடக்கின்றனர்.

ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா
விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஜுன் 3 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக விக்ரம் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓட உள்ளதாம். விக்ரம் படத்திற்கு யுஏ சான்று வழங்கப்பட்டுள்ளதாம்.