விக்ரம் 100-வது நாள் விழா..ஆட்டோவில் வரணும்னு ஆசையான்னு திட்டினார் பாலசந்தர்..கமல் சொன்ன ஃபிளாஷ்பேக்

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றிக்கு மிகுந்த மகிழ்ச்சி, தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை உழைப்பாளிகள் எங்களுக்கு அளித்ததுதான் வெற்றிக்கு காரணம் என கமல் தெரிவித்தார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு ஒருவர் மட்டும் காரணமாக சொல்லக்கூடாது. இதற்கு பின்னால் நூற்றுக்கணக்கானோர் உழைப்பு இருக்கிறது என்று கமல் பேசினார்.

கடந்த 10 ஆண்டு காலத்தில் எந்த பிரசீனையும் இல்லாமல் வெளியிட்ட படம் விக்ரம் தான். அந்த அளவுக்கு தம்பிகள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள் என்று கமல் நன்றியுடன் சொன்னார்.

 62 ஆண்டுகால திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர் கமல்

62 ஆண்டுகால திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர் கமல்

கமல்ஹாசன் 68 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில், விக்ரம் படத்தின் 100-வது நாள் நெருங்கி வரும் நிலையில் அந்த விழாவையும் சேர்த்து படக் குழுவினர் நடத்தினர். கமல்ஹாசனின் திரை வாழ்க்கை 62 ஆண்டுகள். இதில் அவர் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். கமல்ஹாசன் நடிக்க வந்த பொழுது பிறக்காத பலர் இன்று அவர்கள் வாழ்க்கையில் பாதி ஆயுளை கடந்திருப்பார்கள். திரையுலகில் மிக நீண்ட கால அனுபவத்துக்கு சொந்தக்காரர் கமல்ஹாசன் ஒருவர் மட்டுமே. அந்த வகையில் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் நடிகர் கமல்ஹாசனை பிரம்மிப்புடன் பார்க்கின்றனர்.

 விக்ரம் படம் வெளியான 36 ஆண்டுகளுக்கு முன் சிறுவன் இன்று விக்ரம் பட வெற்றி இயக்குநர்

விக்ரம் படம் வெளியான 36 ஆண்டுகளுக்கு முன் சிறுவன் இன்று விக்ரம் பட வெற்றி இயக்குநர்

கமல்ஹாசன் தன்னுடைய வாழ்க்கையில் பணத்தை பெரிதாக பார்க்காதவர், மதிக்காதவர், வருமானத்தை திரைத்துறையிலே முதலீடு செய்தவர், என்று பேச்சை ஆரம்பித்த கேயார் தெரிவித்தார். 100 சதவீதம் உண்மை. தன்னுடைய வாழ்க்கையில் திரை உலகின் பங்களிப்பிற்காக மிகப்பெரிய ரிஸ்கை எல்லாம் எடுத்த கமல்ஹாசன், சந்தித்தது நஷ்டத்தை மட்டுமே. 1986-ல் அவருடைய விக்ரம் படம் வந்தபோது சிறுவனாக இருந்து பார்த்த ஒருவர் 36 ஆண்டுகள் கழித்து அதே பெயரில் படம் எடுத்து கமல்ஹாசனுக்கு அவர் வாழ்நாளில் சந்திக்காத வெற்றியும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டையும் கொடுத்துள்ளார். அவர்தான் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

 விக்ரம் பட வெற்றி மனம் நெகிழ்ந்து பேசிய கமல்ஹாசன்

விக்ரம் பட வெற்றி மனம் நெகிழ்ந்து பேசிய கமல்ஹாசன்

விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் பலரும் பேசிய பின் இறுதியாக மைக்க பிடித்த கமல்ஹாசன் சொன்னது, "ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு தனி ஒருவர் மட்டும் காரணம் என்று யாரும் சொல்லி விட முடியாது. நூற்றுக்கணக்கானோர் உழைப்பு இதில் அடங்கியுள்ளது. ஒருவருடைய உழைப்பு அலட்சியமாக வந்து விட்டால் அந்த படம் தோல்வியை கூட சந்திக்க நேரிடும். அந்த வகையில் இந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள் அவர்களை தம்பிகளில் என்று அழைப்பதா? ரசிகர்கள் என்று அழைப்பதா எப்படி அழைப்பது என்று தெரியவில்லை, . லோகேஷ் கனகராஜ், படத்திற்கு இசையமைத்த அனிருத், படத்தை வாங்கி வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நான் இங்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்", என்று தெரிவித்தார்.

 விக்ரம் வெற்றிக்கு உழைப்பாளி மக்கள் வருமானத்தை பரிசாக அளித்ததே - கமல்

விக்ரம் வெற்றிக்கு உழைப்பாளி மக்கள் வருமானத்தை பரிசாக அளித்ததே - கமல்

மேலும் பேசிய அவர் "படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக கார் பரிசளித்தேன், வாட்ச் பரிசளித்தேன் என்றெல்லாம் தெரிவித்தார்கள். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் உண்மையாக பரிசளித்தவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் தான். இந்த படத்தை பார்த்து தங்களுடைய உழைப்பின் ஒரு பகுதியை பரிசாக அவர்கள் நமக்கெல்லாம் வழங்கியதால்தான் இத்தகைய பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். உண்மையாக நன்றி சொல்ல வேண்டும் என்றால் சாலை ஓரங்களில், தெருவோரங்களிலும், தினக்கூலிகளாக இருந்து கொண்டு தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி படத்தை பார்த்த அந்த உழைப்பாளி மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

 ஆட்டோவில் வர ஆசைப்படுகிறாராயான்னு திட்டினார் பாலசந்தர்- கமல்

ஆட்டோவில் வர ஆசைப்படுகிறாராயான்னு திட்டினார் பாலசந்தர்- கமல்

தொடர்ந்து பேசிய அவர், "இந்த படத்தை பெருவெற்றி பெற செய்த மக்கள் ஒருவேளை புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கே ஜி எஃப்பை பார்த்து பொறாமைப்பட்டார்களா தெரியவில்லை, ஆனால் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். ஆரம்பத்தில் எனக்கு சினிமாவில் டெக்னிஷனாக வர ஆசை அதை பாலச்சந்தரிடம் சொன்னபோது "ஸ்டுடியோவிற்கு ஆட்டோவில் வர விரும்புகிறாயா காரில் வரவேண்டும் என்கிற எண்ணம் இல்லையா? வீடு வாங்க வேண்டும் என்று எண்ணம் இல்லையா? முதலில் நடிக்கிற வழியை பார்" என்று சொன்னார் அவர் சொன்னதை கேட்டேன் எல்லாம் நடந்தது அவரும் என்னை ஒவ்வொரு கட்டத்திலும் உயர்த்தி பிடித்தார். என்னுடைய வாழ்க்கையில் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவித பிரச்சினையும் வெளியான படம் என்றால் விக்ரம் படத்தைதான் சொல்லுவேன்.

 10 ஆண்டுகளில் பிரச்சினை இல்லாமல் வெளியான படம் விக்ரம்.

10 ஆண்டுகளில் பிரச்சினை இல்லாமல் வெளியான படம் விக்ரம்.

அந்த அளவுக்கு எனக்கு எந்தவித கஷ்டங்களையும் கொடுக்காமல் இங்குள்ள அனைவரும் படம் வெளியிடுவது பற்றி மெனக்கெட்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள் இல்லாவிட்டால் மிகவும் திணறிப் போயிருப்பேன் எந்த நேரத்தில் யார் காலை இடறுவார்களோ என்ன பிரச்சனை வருமோ என்றெல்லாம் பெரிய சிந்தனையாக இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

 ஸ்பீல் பர்க்கை உதாரணம் காட்டிய கமல்

ஸ்பீல் பர்க்கை உதாரணம் காட்டிய கமல்

தரமான சினிமா எடுப்பது நம் கடமை தரமான சினிமாவாகவும் இருக்க வேண்டும், கல்லாபெட்டியும் நிரம்பணும். இதற்கு உதாரணம் என்றால் ஸ்பீல் பர்க்கை சொல்ல வேண்டும். அவர் ஒவ்வொரு கட்டத்திலும் படபிடிப்பு தளத்தில் இருப்பார், படித்துக் கொண்டிருப்பார். இவருக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்டார்கள். ஆனால் ரசிகனோடு ரசிகனாக ரசிக மனப்பான்மையில் படத்தை கொடுத்தார் அவர். அப்படி இருந்து தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று சொல்லுவேன். அதை எப்பொழுதும் நாம் கடைபிடிக்க வேண்டும், நீங்களும் அதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ளுங்கள்" என்று லோகேஷ் கனகராஜ் பார்த்து கமலஹாசன் சொல்ல அவர் வேகமாக தலையசைத்து பணிவுடன் ஒப்புக்கொண்டார்.

More from Filmibeat

Read more about: விக்ரம் vikram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X