For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விக்ரம் 100வது நாள்..நினைத்ததை முடித்தாரா கமல்..ஆப்ரேஷன் சக்சஸ் ஃபேஷண்ட் டெத்

  |

  சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஃப்ஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

  விக்ரம் திரைப்படம் அனைத்து விமர்சனங்களையும் தாண்டி 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது. வசூலிலும் சாதனைப் படைத்துள்ளது.

  தயாரிப்பாளர் கமல்ஹாசன் விக்ரம் படம் ஓடியதால் வெற்றி பெற்றுள்ளார். நடிகர் கமல்ஹாசனாக இந்தப்படத்தில் அவருக்கு திருப்தி கிடைத்திருக்குமா? என்றால் கமலுக்குள் ஒளிந்திருக்கும் உலக நாயகன் ஒப்புக்கொள்ள மாட்டார்.

  நான் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கவில்லை..முன்னாள் கணவர் குறித்து பேசிய மகாலட்சுமி!நான் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கவில்லை..முன்னாள் கணவர் குறித்து பேசிய மகாலட்சுமி!

  களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய 60 ஆண்டு கலைப்பயணம்

  களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய 60 ஆண்டு கலைப்பயணம்

  ஏவிஎம் புதிதாக எடுக்கும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஒரு குழந்தையை தேடினார்கள். கிடைக்கவில்லை எப்போதும் நடிக்கும் குழந்தை நடசத்திரத்தையே போடச்சொல்லி தயாரிப்பாளர் கூறிவிட்டார். அவர் பேச்சுக்கு மறுப்பேது. ஆனால் அந்த சுட்டி சிறுவன் அனைவர் மனதையும் மாற்றினான். அனைவர் கவனத்தையும் கவர்ந்தான். தேர்வானான். படத்தில் சொன்னதை செய்தான், பார்க்கும் பார்வையாளர்களை சிரிக்க வைத்தான், அழ வைத்தான் பின் நாளில் அந்தச் சிறுவன் தமிழக திரைத்துறையின் ஆளுமை ஆனார். அவர் கமல்ஹாசன். அறிமுக படம் களத்தூர் கண்ணம்மா. இப்படி முதல் படத்திலேயே முட்டையிலிருந்து வரும் குஞ்சு போல் முட்டி உடைத்துக்கொண்டு வந்தவர்தான் கமல் ஹாசன்.

  கதாநாயகனாக ஆகும் முன் 20 ஆண்டு போராடிய கமல்

  கதாநாயகனாக ஆகும் முன் 20 ஆண்டு போராடிய கமல்

  60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள். போகுமிடமெல்லாம் கற்றலை கைவிடவில்லை. சினிமா, படிப்பு என குழப்பம் சினிமா வென்றது. ஆனாலும் சினிமாவில் கால் பதிக்க 20 ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. உதவி இயக்குநர், நடன உதவி இயக்குநர், சலூன் கடையில் வேலை என இள்ம பருவம் குழப்பத்தில் தான் கழிந்தது. சிறு சிறு வேடங்கள் விடலைப்பருவம் என்பதால் பெரிதாக ஒன்றும் கால் பதிக்க முடியவில்லை. இரண்டாவது கதாநாயகனாக பல படங்கள் பெரிதாக அடையாளம் காட்டவில்லை. கமல் கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் அப்போதைய முன்னணி கதாநாயகியை ஹீரோயினாக போட கேட்டபோது புதுமுக நடிகர் அவர் அவருடன் எல்லாம் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். சில ஆண்டுகள் கழித்து கமல் ஹீரோவாக வளர்ந்திருந்தபோது அதே ஹீரோயின் கமலிடம் வாய்ப்பு கேட்டது வேறு கதை.

  வித்தியாசமான வேடமா? கமல் முதலிடம்

  வித்தியாசமான வேடமா? கமல் முதலிடம்

  சினிமாவுக்காக எதையும் செய்வார் கமல். அப்படித்தான் போர்ட்டிகோ மேலிருந்து குதித்து காலை உடைத்துக்கொண்டு எம்ஜிஆரிடம் திட்டும் வாங்கினார். சகலகலா வல்லவனில் புல்லட்டை ஓட்டிக்கொண்டு கண்ணாடியை உடைக்கும் காட்சியில் கண்ணுக்கு கீழ் காயம்பட்டார். அந்தர்பல்டி, பைக் சாகசம் என அந்தகாலத்திலேயே கலக்கியவர். சிகப்பு ரோஜாக்கள் ஹிட் கொடுத்த அதே ஆண்டில் துப்புரவு தொழிலாளியாக காக்கி அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு படம் முழுவதும் நடித்திருப்பார். பதினாறு வயதினிலே படத்தில் கோவணம் கட்டி நடித்திருப்பார். வித்தியாசமான வேடங்கள் செய்வதில் கமல் அனைவருக்கும் முன் மாதிரி. சிவாஜி கணேசன், நாகேஷ் தான் தனது குருநாதர்கள் என அடிக்கடி சொல்லும் கமல் பல இடங்களில் அவர்கள் செய்யாத சாதனைகளை செய்தவர்.

  கமல்ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளம்

  கமல்ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளம்

  கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளம். காலமும், நிதியும் அல்லது இப்படிச் சொல்வதானால் இன்றுள்ள டெக்னாலஜி வளர்ச்சியும், லைகா போன்ற கார்பரேட் நிறுவனங்கள் அன்று இருந்திருந்தால் எத்தனையோ படைப்புகள், சொல்ல முடியாது மருத நாயகமும் பொன்னியின் செல்வனும் கூட வந்திருக்கும். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதே கமல்ஹாசன் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பல வாய்ப்புகளை உருவாக்கினார். அற்புதமான பல படங்களை கொடுத்தார். அதில் பல புதுமைகளை முதன்முதலாக கமல் அறிமுகப்படுத்தினார். உலக தரத்தில் நாடு பிரிவினை நேரத்தில் நடந்த விஷயங்களை ஹே ராம் படமாக எடுத்தார். இதே படம் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டிருந்தால் சொல்ல முடியாது ஆஸ்கர் விருதை பெற்றிருக்கும்.

  விதவிதமான பாத்திரங்களை சினிமாவில் பரிட்சித்த கமல்

  விதவிதமான பாத்திரங்களை சினிமாவில் பரிட்சித்த கமல்

  உயர குறைபாடு நாயகனாக அப்பு பாத்திரம், மனப்பிறழ்வு நாயகனாக குணா, ஆழவந்தான் படம், பாடலே இல்லாத போலீஸ் நடைமுறை பேசிய குருதிபுனல், கிராமத்து நாயகனாக ஜப்பானிய பாணிய கதை ஆக்கம் கொண்ட விருமாண்டி, பெண்ணாக மிசஸ் டவுட் ஃபயர் ஹாலிவுட் நாயகனுக்கு இணையாக பேசப்பட்ட அவ்வை சண்முகி, குழந்தைக்கடத்தல் குறித்து பேசிய மகாநதி, மனிதம் பேசிய அன்பே சிவன், புதுமைகள் சொன்ன தசாவதாரம், ஹாலிவுட் ரேஞ்சுக்கு முயன்ற விஸ்வரூபம், ஒரே இரவு சம்பவமாக காட்சிபடுத்தப்படும் தூங்காவனம் என பல படங்களை சொல்லலாம். இப்படிப்பட்ட கமல்ஹாசன் கமர்ஷியலுக்காக பல படங்களை செய்துள்ளார். அதை குறை சொல்லவும் முடியாது.

  டார்க் மோடும், வன்முறைக்காட்சிகளும் தான் டெக்னாலஜி வெற்றியா

  டார்க் மோடும், வன்முறைக்காட்சிகளும் தான் டெக்னாலஜி வெற்றியா

  ஆனால் விக்ரம் பட வெற்றியை அது அடைந்த கமர்ஷியல் வெற்றியை இப்படி பார்க்க முடியுமா? கமல்ஹாசன் இதை கமர்ஷியல் படம் என்று சொல்லிவிட்டு நகர்வாரா என்றால் முடியாது. டெக்னாலஜி வளரும்போது அதை வைத்து எடுக்கப்படும் படங்கள் டார்க்மோடு படங்களாகவும், வன்முறைக்காட்சிகளிலும், பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவதற்கும், சண்டைக்காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதைத்தாண்டி நல்ல சினிமாவை இதை வைத்து தந்தோம் என கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சாண்டில்வுட் யாரும் மார்த்தட்ட முடியாது. செம்மரம் கடத்துபவனும், சுரங்கத்திருடனும், கஞ்சா போதை மருந்து கடத்துபவனும் ஹீரோவாக சித்தரிப்பதை கமல் நிச்சயம் வரவேற்க மாட்டார்.

  96 படத்தில் கண்ணியமாக நடித்த ஹீரோ கஞ்சா சாக்லெட் கடிக்கிறார்

  96 படத்தில் கண்ணியமாக நடித்த ஹீரோ கஞ்சா சாக்லெட் கடிக்கிறார்

  கஞ்சாவை கடித்தால் அதிக பலம் பெறும் காட்சியை வைத்தால் பார்க்கும் இளம் தலைமுறையினர் என்ன மன நிலையில் எடுத்துக்கொள்வார்கள், கஞ்சாவை கடித்தால் அதிக பலம் பெறும் காட்சியை வைத்தால் பார்க்கும் இளம் தலைமுறையினர் என்ன மன நிலையில் எடுத்துக்கொள்வார்கள். 96 திரைப்படத்தில் கண்ணியம் காத்த காதலனாக வந்து மனதில் நிறைந்த விஜய் சேதுபதி இப்படி போதைக்கு வக்காலத்து வாங்குவது போல வந்து நின்றால், சமூக நலம் விரும்பிகளுக்கு வருத்தம் வரத்தானே செ்யயும்.

  ரோலக்ஸ் என்ன சுதந்திரப்போராட்ட வீரர் பாத்திரமா தூக்கி வைத்து கொண்டாட?

  ரோலக்ஸ் என்ன சுதந்திரப்போராட்ட வீரர் பாத்திரமா தூக்கி வைத்து கொண்டாட?

  ரோலக்ஸ், ரோலக்ஸ் என கொண்டாடப்படும் பாத்திரம் என்ன சுதந்திரப் போராட்ட வீரர் பாத்திரமா? ஜெய் பீம் என சமூக அக்கறைக்கொண்ட படத்தில் நடித்த நடிகர் சூர்யாதான், ரோலக்ஸ் ரோலில் நடிக்கிறார். அவரை பின்பற்றும் ரசிகர்கள் இதை பின்பற்றுவார்களா மாட்டார்களா? கமல் துப்பாக்கியை தூக்கி குற்றவாளிகளை அழிப்பதுபோல் காட்சியில் நடித்தேன் எனலாம், ஆனால் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தவர்கள் எல்லாம் முன்னணி ஹீரோக்கள் அல்லவா? ஒரு படத்தில் மாணவர்களை தவறாக சித்தரித்துவிட்டு கடைசியில் இப்படி எல்லாம் செய்யக்கூடாது என ஒரு கதாப்பாத்திரம் சொல்லும். அந்தப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதுவும் அந்த வகைத்தானே.

  சிவாஜிக்கு ஒரு நியாயம் உலக நாயகனுக்கு ஒரு நியாயமா?

  சிவாஜிக்கு ஒரு நியாயம் உலக நாயகனுக்கு ஒரு நியாயமா?

  உலக நாயகன் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார். தயாரிப்பாளர் கமலுக்கு இது நெருக்கடியான ஒன்றாக இருக்கலாம். ஆனால் திரைத்துறையில் 60 ஆண்டுகாலம் பல அருமையான படங்களை கொடுத்த திரையில் சம்பாதித்ததை திரைத்துறையிலேயே முதலீடு செய்த உலக நாயகன் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஊர் பாராட்டு, சமூக வலைதளங்களில் பாராட்டு எல்லாம் ஒருவகையான மெகா மெஸ்மரிசம் என்பது அவருக்கு தெரியும். கம்ல்ஹாசன் ஒரு தடவை சிவாஜி கணேசன் நடித்த மோசமான கமர்ஷியல் படத்தை பார்த்துவிட்டு பொறுக்க முடியாமல் என்னெண்ணே நீங்கள் இப்படின்னு கேட்க என்ன செய்றது என்னையும் கிணற்றில் இறக்கிவிட்டுட்டாங்க என சிவாஜி வருத்தப்பட்டதாக பேட்டியில் சொல்லியிருப்பார். அதே மன நிலையில்தான் இந்த வாதமும் வைக்கப்படுகிறது. டெக்னாலஜிக்கள் வளர்ந்த காலம், டார்க்மோடு, வன்முறை பின்னே ஓடினால் தமிழ் சினிமாவை யார்தான் தூக்கி நிறுத்துவது.

  English summary
  Vikram Moview has successfully run for 100 days beating all the critics. It has also set a record in collections. Producer Kamal Haasan's Vikram was a commercial success. Will Kamal Haasan be satisfied with this film? The 'Ulaga Nayagan' hidden in him will not agree.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X