15 கை.. 2 கொம்பு.. கூலருடன் புல்லட்டில் பறக்கும் விக்ரம்..வெளியானது ஃபர்ஸ்ட் லுக்.. தலைப்பு இதுதான்!

சென்னை: விக்ரம் நடிக்கும் 60வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருகிறார்.

விக்ரமின் 60 வது படம் என்பதால், சீயான் 60 என இந்தப் படம் குறிப்பிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

Vikrams 60th movie titled as Mahaan

அதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்படி படத்திற்கு மகான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கறுப்பு டிரெஸில் இரண்டு கொம்பு, 14 கைகளுடன் சிவப்பு நிற கூலர் அணிந்து சிரித்தப்படியே டூ வீலர் ஓட்டுகிறார் விக்ரம்.

கறுப்பு மஞ்சள் சிவப்பு காம்பினேஷனில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது. சீயான் 60 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக தயாராகிறது என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விக்ரம் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாக கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

Vikrams 60th movie titled as Mahaan

படத்தின் சில காட்சிகள் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து நேபாள எல்லையில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர். இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத்தான் இசையமைப்பார் என முதலில் அறிவித்தனர். பிறகு அவரை மாற்றிவிட்டு கார்த்திக் சுப்பாராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தனர்.

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து #Chiyaan60FirstLook என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X