கோப்ராவை முந்தும் சியான் 60...குஷியில் விக்ரம் ரசிகர்கள்

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பால் பலரையும் கவர்ந்த நடிகர்களில் விக்ரமும் ஒருவர். கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கெட்அப்களில் அதிகம் நடிப்பவர் விக்ரம் தான்.

விக்ரம் தற்போது சியான் 60, கோப்ரா ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். லேட்டஸ்ட் தகவலாக கோப்ரா படத்திற்கு முன் சியான் 60 படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

நீண்ட காலமாக இழுக்கும் கோப்ரா

நீண்ட காலமாக இழுக்கும் கோப்ரா

ஆக்ஷன் த்ரில்லர் படமான கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். கொரோனா காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த படம் தாமதமாகி வருகிறது. கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தான் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம்

கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம்

கோப்ரா படத்தில் விக்ரம் பலவிதமான தோற்றங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் அதிக அளவில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் படத்தை முடிக்க அதிக கால தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

சியான் 60 தான் முதலில்

சியான் 60 தான் முதலில்

கோப்ராவை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான சியான் 60, படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதனால் கோப்ராவிற்கு முன் சியான் 60 படம் தான் முதலில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.

விரைவில் சியான் 60 படப்பிடிப்பு

விரைவில் சியான் 60 படப்பிடிப்பு

சியான் 60 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் முதல் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்தின் 50 சதவீதம் படப்பிடிப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள காட்சிகள், லாக்டவுன் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஜுலை மாதத்தில் துவங்கப்பட உள்ளன.

பொன்னியின் செல்வனும் இருக்கு

பொன்னியின் செல்வனும் இருக்கு

இந்த படங்களுடன் சேர்த்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கேரக்டரில் விக்ரம் நடித்து வருகிறார். சியான் 60 படத்தின் வேலைகளை முடித்த பிறகு, பொன்னியின் செல்வன் வேலைகளை விக்ரம் துவக்க உள்ளார்.

குஷியான விக்ரம் ரசிகர்கள்

குஷியான விக்ரம் ரசிகர்கள்

அடுத்தடுத்து விக்ரமின் படங்கள் வெளியாக வரிசையாக காத்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் சியான் 60 மற்றும் கோப்ரா பற்றிய அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட கோப்ரா படத்தில் விக்ரமின் புதிய கெட்அப் ஸ்டில்லை அவரது ரசிகர்கள் வைரலாக்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X