விக்ரமின் ‘சீயான் 60‘... டைட்டில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை : சீயான்60 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சியான் 60. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

துருவ் விக்ரமுடன்

துருவ் விக்ரமுடன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் இணையத்தில் வெளியான திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பிராஜ் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக சியான்60 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விக்ரமின ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில்

பொன்னியின் செல்வன் படத்தில்

விக்ரம் கடைசியாக கடாரம் கொண்டான் இத்திரைப்படம் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் "பொன்னியின் செல்வன்" படத்திலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் "கோப்ரா" படத்திலும் நடித்து வருகிறார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' எஸ். விமல் இயக்கத்தில், மகாவீர் கர்ணன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்தது

படப்பிடிப்பு முடிந்தது

விக்ரம் 60' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கியது. இதையடுத்து, கொரோனா இரண்டாவது அலையால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதும் தொடக்கப்பட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றன. இந்த நிலையில் சீயான் 60 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சீயான் 60 படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகின.

தலைப்பு எப்போ ரிலீஸ் தெரியுமா

தலைப்பு எப்போ ரிலீஸ் தெரியுமா

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சீயான்60 திரைப்படத்தின் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 20ந் தேதி வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே விக்ரமின் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X