கோப்ரா பட சென்சார், ரன்னிங் டைம் விபரம் வெளியானது
சென்னை : டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்தீவ், பத்ம பிரியா, மிருனாளினி ரவி, கனிகா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோருக்கு தமிழில் முதல் படம் இது தான். விக்ரமின் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் ஒரு மாத கேப்பில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

கோப்ரா சென்சார் விபரம்
இந்த சமயத்தில் கோப்ரா படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பை த்ரில்லிங் படமான கோப்ராவில் விக்ரம் மிக அதிகமான கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தான் படத்திற்கு மிகப் பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா
கோப்ரா படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சியான் 62 அப்டேட்டும் வந்தாச்சு
சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் பேசிய விக்ரம், கோப்ராவிற்கு பிறகு அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து மற்றொரு படம் பண்ண உள்ளதாக அப்டேட் வெளியிட்டுள்ளார். இது சியான் 62 படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் பா.ரஞ்சித் இயக்கும் சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் விக்ரம் தற்போது நடித்து வருகிறார்.

விக்ரம் சொன்ன ஷாக் தகவல்
கோப்ரா படத்தில் விக்ரம், டைட்டில் ரோலில் நடித்துள்ளார். விஞ்ஞானி உள்ளிட்ட மொத்தமாக 25 க்கும் அதிகமான கெட்அப்களில் விக்ரம் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. விக்ரமின் வித்தியாசமான கெட்அப்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதை நம்பி, எதிர்பார்த்து யாரும் படத்திற்கு வர வேண்டாம் என விக்ரம் சமீபத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

இன்று கோப்ரா அடுத்த அறிவிப்பா
இந்நிலையில் இன்று மாலை கோப்ரா படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இன்று கோப்ரா டே என ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











