ஏஆர் ரஹ்மானின் உயிர் உருகும் பாடல் ப்ரமோ.. கோப்ரா படத்தின் 3வது சிங்கிள்.. நாளைக்கு ரிலீஸ்!
சென்னை : நடிகர் விக்ரம் படத்தின் கோப்ரா படம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகியுள்ளது.
படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் 2 பாடல்கள் வெளியான நிலையில் நாளைய தினம் படத்தின் 3வது பாடல் ரிலீசாகவுள்ளது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் சிறப்பான நடிகர் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். தான் ஏற்கும் கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும் அதற்காக சிறப்பாகவே மெனக்கெடுவார். ஆரம்பத்தில் சரியான படவாய்ப்புகள் இல்லாத நிலையில், சேது என்ற படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

வெற்றியின் சூட்சுமம்
அந்தப் படத்திலிருந்துதான் வெற்றியின் சூட்சமம் அவருக்கு புலப்பட்டது. அதை சிறப்பாக பற்றிக் கொண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவர் தனது கேரக்டர்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் வலியானது யாராலும் கணிக்க முடியாதது. இது சேது படத்திலிருந்துதான் சாத்தியமானது.

படங்களில் ஈடுபாடு
ஐ உள்ளிட்ட படங்களில் இவர் காட்டிய ஈடுபாடு படம் பார்ப்பவர்களை கண்ணீர் விட வைத்தது. தற்போது வரை இந்த விஷயத்தை தொடர்ந்து வருகிறார் விக்ரம். தற்போது டிமாண்டி காலனி என்ற சிறப்பான படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்துவின் படத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில், அந்த மெனக்கெடல் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளது.

நாளை வெளியாகும் 3வது பாடல்
படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. படத்தில் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் வருகிறாராம் விக்ரம். இந்தப் படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் 3வது சிங்கிள் நாளைய தினம் வெளியாகவுள்ளது.

அதிகரித்த எதிர்பார்ப்பு
முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. லைக்ஸ்களையும் அள்ளியது. ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதை தன்னுடைய பாடல்கள் மூலம் மேலும் எகிற செய்துள்ளார் இசைப்புயல்.
3வது பாடல் ப்ரமோ
இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள 3வது பாடலின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. உயிர் உருகுதே என்று துவங்கும் அந்தப் பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். பாடலை ஏஆர் ரஹ்மான் பாடியுள்ளார். மெலடியாக உருவாகியுள்ள இந்தப் பாடலின் முழுமையான வடிவத்தை காண தற்போதே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வெளியான சில நிமிடங்களிலேயே பாடலின் ப்ரமோவே தற்போது ஒரு மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











