விக்ரமின் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.... அடுத்த மாதத்தில் துவக்கம்

சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் கோப்ரா.

இந்தப் படத்தின் சூட்டிங் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தன்னுடைய மகன் துருவ்வுடன் இணைந்து மகான் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் சியான விக்ரம் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் உருவாகிவரும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்பை த்ரில்லர்

ஸ்பை த்ரில்லர்

ஸ்பை த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் காணப்படுகிறார். படத்தில் மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, கேஎஸ் ரவிக்குமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென கொல்கத்தாவிற்கு படக்குழுவினர் விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோடைக் கொண்டாட்டமாக ரிலீஸ்

கோடைக் கொண்டாட்டமாக ரிலீஸ்

இந்த சூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அடுத்த மாதத்தில் இறுதிக்கட்ட சூட்டிங் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தை விரைவில் நிறைவு செய்து அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சியான் விக்ரமும் படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றி எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X