Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?
சென்னை : மகான் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ளது கோப்ரா படம்.
Recommended Video
இந்தப் படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது.
கமலின் அடுத்த படத்தில் மம்முட்டியா ?...தளபதி 2 கமல் வெர்சனா இருக்குமோ?
நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது மகான். இந்தப் படத்தில் பல முக்கியமான விஷயங்களை கேள்விக்குறியாக்கியிருந்தார் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இருவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
கோப்ரா படம்
இந்நிலையில் விக்ரமின் அடுத்தப் படமாக கோப்ரா வெளியாகயுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பும் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. வித்தியாசமான பல கெட்டப்புகளை இந்தப் படத்தில் விக்ரம் போட்டுள்ளார்.
மிரட்டலான போஸ்டர்கள்
இந்த கெட்டப்புகள் குறித்த போஸ்டர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இது இந்தப் படத்திற்கான சிறப்பான அப்டேட்டாக பார்க்கப்படுகிறது.
விற்றுத் தீர்ந்த ஓடிடி உரிமை
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி உரிமையையும் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி வெளியாகவுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் சில வாரங்கள் ஓடியபின்பு ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை சோனி லைவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கைமாறிய பல கோடி ரூபாய்
பல கோடி ரூபாய்க்கு இந்த உரிமை கைமாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்போதுமே விக்ரம் படங்கள் ரசிகர்களிடம் மாஸ் காட்டும். ஆனால் இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு முன்னதாகவே அதிகமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் விக்ரம் -அஜய் ஞானமுத்து கூட்டணிக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
த்ரில் அனுபவம்
விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்போதுமே விக்ரம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்ற நடிகர்களுக்கு சவால் விடும்வகையில்தான் அமையும் அந்த வகையில் இந்தப் படமும் சிறப்பான த்ரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறது.