தொடர்ந்து தள்ளிப் போகும் கோப்ரா ரிலீஸ்... என்னதாங்க நடக்குது... ரசிகர்கள் கேள்வி!

சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியானது மகான் படம். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக விக்ரமின் கோப்ரா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் சியான் என்று தன்னுடைய ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். சேது என்ற படத்தில் நடித்ததன்மூலம் இந்தப் பெயர் இவருக்கு கிடைத்தது. அந்தப் படத்தில் கேரக்டர் பெயர் வேறாக இருந்தாலும் சியான் என்றே அழைக்கப்படுவார். கல்லூரியில் டான் லெவலுக்கு அவரது கேரக்டர் இருக்கும்.

வாய்ப்பை பயன்படுத்திய விக்ரம்

வாய்ப்பை பயன்படுத்திய விக்ரம்

தன்னுடைய சிறப்பான என்ட்ரிக்காக காத்திருந்த வேளையில்தான் இவருக்கு பாலா இயக்கத்தில் சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் விக்ரம். படத்திற்காக உடல் எடையை குறைத்து அவர் காட்டிய வித்தியாசம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

தொடர்ந்து ஐ உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு மிகவும் மிரட்டலாக அமைந்தது. சிறிய கதாபாத்திரங்களுக்கும் இவர் மெனக்கெடுவது இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. அவரது மகன் த்ருவ் விக்ரம் நடிக்க வந்த நிலையிலும் இருவரும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து வருகின்றனர்.

மகான் படத்தில் விக்ரம்

மகான் படத்தில் விக்ரம்

தன்னுடைய மகனுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார் விக்ரம். படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், மகன் பாசம், விரக்தி உள்ளிட்ட பல பரிணாமங்களை தன்னுடைய கேரக்டரில் வெளிப்படுத்தியிருந்தார். படம் நேரடியாக ஓடிடியில் வெளியான போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தள்ளிப் போகும் கோப்ரா ரிலீஸ்

தள்ளிப் போகும் கோப்ரா ரிலீஸ்

இந்நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது கோப்ரா. இந்தப் படம் இதோ ரிலீசாகும், அதோ ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னமும் படம் ரிலீசாகாமல் ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அஜய் ஞான முத்து படத்தை இயக்கியுள்ளார்.

பலவித கெட்டப்புகள்

பலவித கெட்டப்புகள்

படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படத்திலிருந்து அதீரா பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. பாடலில் மிரட்டியுள்ளார் விக்ரம்.

ஆகஸ்ட் 12ல் கோப்ரா ரிலீஸ்?

ஆகஸ்ட் 12ல் கோப்ரா ரிலீஸ்?

கோப்ரா படம் இந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போலவே இந்த முறையும் இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி தான் படம் ரிலீசாகும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறையாகவது சரியாக படம் ரிலீசாகுமா என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X