கோப்ரா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல டிவி நிறுவனம்

சென்னை : நடிகர் சியான் விக்ரம் கோலிவுட்டின் வைரமாக போற்றப்படுகிறார். சியான் என்பது ரசிகர்கள் அவருக்கு வைத்த செல்லப்பெயர். இது சேது படத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. அவர் தனது 56வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். வயது என்பது அவரைப் பொருத்தவரை ஒரு நம்பராகவே உள்ளது. அவருக்கு வயது ஏறுவதாகவே தெரியவில்லை.

நடிகர் சியான் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம் சினிமாவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். எந்தப் படமாக இருந்தாலும் அதில் தன்னுடைய முத்திரையை கண்டிப்பாக பதித்து விடுவார். இதனால்தான் அவர் கோலிவுட்டின் வைரமாக கொண்டாடப்படுகிறார். சேது படத்திலிருந்தே சியான் என்று ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறார்.

விக்ரமின் மகான் படம்

விக்ரமின் மகான் படம்

அவரது அடுத்தடுத்தப் படங்கள் கோலிவுட்டில் சிறப்பிற்கு தனி பெருமையை சேர்த்து வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தனது மகனுடன் இணைந்து நடித்திருந்தார் விக்ரம்.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்றது இந்தப் படம். சியான் இந்தப் படத்தில் மிரட்டியிருந்தார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் சூழ்நிலையில், தனிப்பட்ட விருப்பங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. படத்தில் த்ருவ்வின் நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

ரிலீசுக்கு தயாராகும் கோப்ரா

ரிலீசுக்கு தயாராகும் கோப்ரா

இதையடுத்து விக்ரம் நடிப்பில் கோப்ரா, துருவ நட்சத்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் கோப்ரா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

56வது பிறந்தநாள் கொண்டாட்டம்

56வது பிறந்தநாள் கொண்டாட்டம்

இதனிடையே இன்றைய தினம் தனது 56வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் விக்ரம். இதையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கோப்ரா படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை படத்தின் 2வது சிங்கிள் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்ரா சாட்டிலைட் உரிமை

கோப்ரா சாட்டிலைட் உரிமை

இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக விக்ரமின் மகான், துருவ நட்சத்திரம் படங்களின் சாட்டிலைட் உரிமைகளையும் கலைஞர் டிவி பெரிய தொகைக்கு வாங்கியுள்ள நிலையில், தற்போது கோப்ரா படத்தின் சாட்டிலைட் உரிமையையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X