என்ன மனுஷன்யா.. ஒவ்வொரு லுக்கிலும் சும்மா மிரட்டுறாரே விக்ரம்.. கோப்ரா படத்தின் அதீரா பாடல் ரிலீஸ்!

சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் அதீரா பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், கேஜிஎஃப் 2 ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் கோப்ரா.

இந்த ஆண்டு நிச்சயம் படம் ரிலீஸ் அகிவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள அதீரா பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

விக்ரம் கம்மிங் ஒத்து

விக்ரம் கம்மிங் ஒத்து

சேது, தில், ஜெமினி, தூள், காசி, பிதாமகன், சாமி என ஒரு காலத்தில் சிக்சர் அடித்த சியான் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மிரட்டி எடுத்தார். பெரிதும் எதிர்பார்த்த ஐ, ராவணன் படங்கள் சரியாக போகாத நிலையில், சறுக்கிய விக்ரம் மீண்டும் கோப்ரா, பொன்னியின் செல்வன் என கம்பேக் கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க

சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள் மூலம் தன்னுடைய இயக்கத் திறமையை நிரூபித்த இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோப்ரா படம் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு ஷூட்டிங் செய்ய முடியாமல் சிக்கலில் சிக்கியது. இந்நிலையில், அனைத்து ஷூட்டிங்கும் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.

தும்பி துள்ளல்

தும்பி துள்ளல்

கோப்ரா படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் வெளியான தும்பி துள்ளல் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்து, பழைய பாடல் பட்டியலிலேயே சேர்ந்து விட்டது. இந்நிலையில், அடுத்த பாடலை படக்குழு தற்போது வெளியிட்டு மீண்டும் கோப்ராவின் வைபை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.

இனி அதீரா ஆட்டம்

இனி அதீரா ஆட்டம்

ராக்கி பாயின் ராஜ்ஜியத்தை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அடுத்ததாக கோப்ரா அதீராவின் ஆட்டத்தை ரசிகர்கள் வியந்து பார்க்கப் போகின்றனர் என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது அதீரா பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

என்ன மனுஷன்யா

தசாவதாரம் கமல்ஹாசன் போல கோப்ரா படத்தில் சியான் விக்ரம் பல கெட்டப்களை போட்டு மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மொத்தம் 11 கெட்டப்புகள் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 7 கெட்டப்புகளை இயக்குநர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அதீரா பாடலில் சியான் விக்ரம் எந்தளவுக்கு சின்சியராக ஒவ்வொரு கெட்டப்பிற்கும் தன்னை அர்பணித்துக் கொண்டார் என்கிற மேக்கிங் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலன்

இந்த ஆண்டு ஓடிடியில் மகான் படத்தை வெளியிட்டு பாராட்டுக்களை அள்ளிய சியான் விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படம் மூலம் தியேட்டரை தெறிக்க விட காத்திருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X