ஒருவழியாக 3 ஆண்டுகளுக்கு பிறகு சூட்டிங்கை முடித்த கோப்ரா டீம்... டைரக்டர் சொன்ன தகவல்

சென்னை : நடிகர் விக்ரம் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கோப்ரா.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள விக்ரம் படங்களில் இதுவும் ஒன்று.

தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளிவந்து அவரது ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள மகான் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகாதது குறித்து முன்னதாக ஏமாற்றம் தெரிவித்தனர். விக்ரம் முதல்முறையாக இந்தப் படத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் மற்றும் சிம்ரனுடன் இணைந்து நடித்திருந்தார்.

கோப்ரா சூட்டிங் நிறைவு

கோப்ரா சூட்டிங் நிறைவு

கொரோனா காரணமாக சூட்டிங் தள்ளிப் போன விக்ரமின் அடுத்தடுத்த படங்களின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவரது நடிப்பில் பொன்னியில் செல்வன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே நீண்ட எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள அவரது கோப்ரா படத்தின் சூட்டிங்கும் தற்போது நிறைவடைந்துள்ளது.

டைரக்டர் அப்டேட்

டைரக்டர் அப்டேட்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து அப்டேட் தெரிவித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

கேக் வெட்டிக் கொண்டாட்டம்

கேக் வெட்டிக் கொண்டாட்டம்

இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அதில் விக்ரம், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜய் ஞானமுத்து, 3 ஆண்டுகள் நடைபெற்ற சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து நன்றி

அஜய் ஞானமுத்து நன்றி

கடினமான காலத்தில் தன்னுடன் பயணம் செய்த நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததையடுத்து படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X